பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1987இல், ஆஸ்திரேலியா நாட்டில், முதல் முறையாக வழங்கப்பட்ட சிட்னி நகரின் பிரஜா உரிமையைப் பெறும் முதல் நபராக மண்டேலா தேர்வு செய்யப்பட்டார்.

கரீபியன் நாட்டின், யுனைடேட் ஸ்டேட்ஸ் ராஸ் யுனிவர்சிட்டி மெடிகல் ஸ்கூல் மண்டேலாவுக்கும் வின்னிக்கும் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியது.

நேட்டாலில் உள்ள, இசிபிங்கோ மற்றும் மாவட்டக் கால்பந்து விளையாட்டுக் கழகம் அவரைப் புரவலராக ஏற்றுக் கொண்டது.

அமெரிக்காவின் மிச்சிகன் யுனிவர்சிட்டி அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் தந்தது.

க்யூபா நாட்டின் ஹவானா யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இத்தாலியில், பிளாரன்ஸ் மாநகரம் அவரை கெளரவப் பிரஜையாக அங்கீகரித்தது.

ஜோகன்னஸ்பர்க் நகர ‘ஸோவேடன்’ என்ற பத்திரிகை, தென் ஆப்பிரிக்காவை யார் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் முதன்மை இடம் மண்டேலாவுக்கே அளிக்கப்பட்டிருந்தது.

லீப்ஸிக் நகரில் உள்ள ஜெர்மன் ஜனநாயகக் குடியாட்சியின் கார்ல் மார்க்ஸ் யுனிவர்சிட்டி அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

ஜெர்மனியின் பெடரல் ரிபப்ளிக், பிரெமென் ஒருமைப்பாடுப் பரிசை அவருக்கு வழங்கியது.

கிரேட் பிரிட்டனில், தேசிய ஆசிரியர்கள் சங்கம் நெல்சன், வின்னி மண்டேலா இருவரையும் சங்கத்தின் கெளரவ உறுப்பினர்களாகத் தேர்வு செய்தது.

நெல்சன் மண்டேலாவின் எழுபதாவது பிறந்த நாள் விழா 1988 ஜூன் 11 ஆம் தேதி, லண்டன் மாநகர் வெம்பிளி ஸ்டேடியத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அங்கு


வல்லிக்கண்ணன் • 67