பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிகழ்ந்த இனிய நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு 72,000 பேர் கூடியிருந்தனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பெற்ற விழா நிகழ்ச்சிகளை உலகெங்கனும், அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில், பல கோடிப் பேர்கண்டு களித்தார்கள்.

அயர்லாந்தின் டப்ளின் நகரக் குடி உரிமை அவருக்கு அளிக்கப்பட்டது.

சக்காரோவ் பரிசு கொடுக்கப்பட்டது.

வெனிசுலா நாட்டின் காராபோபோ யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் தந்தது.

கிரீஸ் நாட்டின் லெவ்காடா மக்கள் சமாதானப் பதக்கத்தை வழங்கினர்.

ஒன்பது கிரேக்க நகர சபைகள் கெளரவக் குடி உரிமையை அவருக்கு அளித்தன.

இத்தாலியின் பொலோக்னா யுனிவர்சிட்டி, அரசியல் விஞ்ஞானத்துக்கான கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.

இத்தாலி நாட்டின் பொலோக்னா நகர சபை கெளரவக் குடிஉரிமையை அவருக்கு அளித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நான்காவது பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில், புது டில்லியில் ஒரு சாலைக்கு ‘நெல்சன் மண்டேலா ரோடு’ என்ற பெயர் இடப்பட்டது.

நிகரகுவா நாட்டின் ஜனாதிபதி டானியல் ஓர்டெகா நிறுவிய அகஸ்டோ சீசர் சேண்டினோ விருது மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டது.

ஜிம்பாப்வே நாட்டின் கிவீகிவீ நகர முனிசிபாலிட்டி அந்நகர சபையின் சுதந்திர உரிமையை அவருக்கு வழங்கியது.


68 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா