பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரான்சில், கிளேயெஸ்-ஸீ-போய்ஸ் என்ற இடத்தில் உள்ள சதுக்கத்துக்கு ‘நெல்சன் மண்டேலா சதுக்கம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய யூனியன் அவரைத் தங்கள் சங்கத்தின் கெளரவ ஆயுள் காலத் தலைவராக ஆக்கிக் கொண்டது.

ஜிம்பாப்வேயில், ஹராரே நாட்டின் குடி உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.

மார்ச் 5 ஆம் தேதி ஜிம்பாப்வேயில் மண்டேலா தினம் ஆக அறிவிக்கப்பட்டது. அன்று விடுதலை நாளாகத் தீர்மானிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டுக்கான லெனின் அமைதிப் பரிசு மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டது.

அங்கோலா நாட்டின் மக்கள் குடியரசு, அந்நாட்டின் மிக உயர்ந்த விருது ஆகிய டாக்டர் அன்டோனியோ அகாஸ்டின்ஹோ நெட்டோ ஆர்டர் என்பதை அவருக்கு அளித்தது.

நைஜீரியாவின் ஃபெடரல் குடியரசின் உயர் தளபதி விருது வழங்கப்பட்டது.

லிபியா நாட்டின் டிரிப்போலியில், மனித உரிமைகளுக்கான அல் காடபி சர்வதேச விருது அளிக்கப்பட்டது.

எகிப்தில், கெய்ரோ யுனிவர்சிட்டி, அரசியல் விஞ்ஞானத்துக்கான கெளரவப் பட்டத்தை அவருக்கு அளித்தது.

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

மலேயா யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.


70 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா