பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னர் விடுதலை செய்யப்பட்டு, நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவரானார். உலக நாடுகளின் வரவேற்பையும் போற்றுதலையும் பெறமுடிந்தது அவரால். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

சரித்திரம் படைத்து, சரித்திரத்தில் நிலையான ஓர் இடத்தைப் பெற்றுள்ள தலைவர் நெல்சன் மண்டேலா, உலகம் போற்றும் உயர்நிலையை அடைவதற்கு இளமை முதலே கடுமையான நீண்ட பாதையில் துணிவோடும் தன்னம்பிக்கையோடும், ஆற்றல் நிறைந்த உழைப்போடும் அயராது பாடுபட்டுள்ளதை அவரது வரலாறு கூறுகிறது.

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு, தொடர் போராட்டங்களின் பதிவுகளைக் கொண்டது ஆகும். சில சமயம் பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பினும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையோடு புத்தெழுச்சி பெற்ற வீரச் சமரின் வரலாறு ஆகும். இறுதியில் நிறைவான வெற்றிகண்ட ஒரு வீரகாவியமாகும் அது.


8 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா