பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கேப் டவுணில், பெல்வல்லி நகரில், மேற்கு கேப் நகர யுனிவர்சிட்டி, சட்டத்திற்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

1991இல் ஜோகன்னஸ்பர்க்கில், விட்வாட்டர்ஸ் ரேண்ட் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் தந்தது.

கார்டே மெனில் மனித உரிமைகள் பரிசு வழங்கப்பட்டது.

1991ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ சமாதானப் பரிசை 1992 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாரிஸ் நகரில் அவர் பெற்றார்.

வடபகுதி யுனிவர்சிட்டியின் சான்ஸ்லர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது.

ஃபோர்ட் ஹேர் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்த்து.

செனகல் நாட்டில், டாகார் நகரில் உள்ள ஷேக் அன்ட்டா டியோப் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

ஜோகன்னஸ்பர்க்கில், மியாமி கடற்கரையின் கெளரவ மெடாலியன் விருது தரப்பட்டது.

பாகிஸ்தான், நிஷான்-இ-பாகிஸ்தான் விருதை அளித்தது.

ஸ்பெயின் நாட்டில், ஒவீடோ நகரில், சர்வதேசக் கூட்டுறவுக்கான அஸ்டுரியாஸ் பரிசு மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.

‘பீப்பிள் ஃபார் தி அமெரிக்கன் வே’ பரிசளிப்பு விழாவில் ‘ஸ்பிரிட் ஆஃப் லிபர்ட்டி’ விருது அவருக்குத் தரப்பட்டது.

1993இல், ஜோகன்னஸ்பர்க்கில் கிளிட்ஸ்மன் பவுண்டேஷன் சர்வதேசச் செயல்வீரர் விருது வழங்கப்பட்டது.

பிரசிடென்ட் ஃஎப். டபிள்யுடி கிளெர்க் உடன் சேர்ந்து, மண்டேலா, பிலடெல்பியா லிபர்ட்டி மெடல் அவார்டைப்


வல்லிக்கண்ணன் • 71