பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்றார். பிலடெல்பியாவின் பிரசிடென்ட் ஆன கிளிண்டன் அந்த விருதை வழங்கினார்.

அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் அட்லன்டா நகரின் கிளார்க் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

‘அபோஸ்தலிக் ஹால்மானிடேரியன் அவார்ட்’ விருதை ஜோகன்னஸ்பர்க்கில் அவர் பெற்றார்.

தைவான் நாட்டின் சூச்செள யுனிவர்சிட்டி கெளரவ சட்ட டாக்டர் பட்டம் வழங்கியது.

ஜே. வில்லியம் ஃபுல் பிரைட் பரிசு, சர்வ தேச உறவு முறைகளுக்கானது, வாஷிங்டன் நகரில் அவருக்கு அளிக்கப்பட்டது.

பெல்ஜியம் நாட்டில், புரூசெல்ஸ் யுனிவர்சிட்டி கெளரவப் பட்டம் அளித்தது.

டிசம்பர் 10ஆம் தேதி, நார்வேயில் ஆஸ்லோ நகரில், நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

1994 ஆம் வருடம், ‘நியூ நேஷன்/ எங்கர் மேன் ஆஃப் தி ஈயர் ஃபிளேம் ஆஃப் டிஸ்டிங்ஷன்’ எனும் சிறப்பு மிக்க விருது அளிக்கப்பட்டது.

துணைத் தலைவர் ஃஎப். டபிள்யு டி கிளெர்க் உடன் சேர்த்து, ஆண்டின் சிறந்த செய்திப் படைப்பாளர் (நியூஸ் மேக்கர் ஆஃப் தி ஈயர்) என்ற பெருமைக்குரிய விருதை ஜோகன்னஸ்பர்க் பிரஸ் கிளப் மண்டேலாவுக்கு அளித்தது.

பசி ஒழிப்பு இயக்கத்தின் எட்டாவது ஆண்டு ஆப்பிரிக்கப் பரிசு, பசி ஒழிப்புக்காகப் பாடுபட்ட தலைவர் என்ற தன்மையில் மண்டேலாவுக்கு லண்டன் மாநகரில் அளிக்கப்பட்டது.

மனித உரிமைகள் மற்றும் சகிப்புத் தன்மைக்கான ஆனி ஃப்ராங்க் பதக்கம் ஜோகன்னஸ்பர்க்கில் தரப்பட்டது.


72 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா