பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முஸ்லிம் பெண்களின் கூட்டமைப்பு, ஷேக் யூசப் அமைதிப் பரிசை அவருக்கு வழங்கியது.

ஆர்தர் ஏ ஹல்க்டன் ஸ்டார் கிரிஸ்டல் அவார்ட் எனும் மேன்மைக்கான விருதினை, அப்பிரிக்கா - அமெரிக்க இன்ஸ்டிட்யூட் இடமிருந்து மண்டேலா பெற்றார்.

ஹோவார்ட் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

நேட்டால் நாட்டில், க்வா ஜூலு வட்டாரத்தில், டோங்காட் நகரின் குடி உரிமையை அவர் பெற்றார்.

‘ஒலிம்பிக் கோல்ட் ஆர்டர்’ எனும் விருதை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜூவான் அன்டோனியோ சமரான்ச், கேப் டவுணில், அவருக்கு அளித்தார்.

ஆண்டின் சிறந்த மனிதர் (மேன் ஆஃப் தி ஈயர்) விருதை, தென் ஆப்பிரிக்காவின் கிரேக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் அமைப்பு மண்டேலாவுக்கு வழங்கியது.

தென் ஆப்பிரிக்க யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

கனடா நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் போட்டி விளையாட்டுக்களில் தென் ஆப்பிரிக்க விளையாட்டு வீரர்கள் பெற்ற ‘காமன்வெல்த் சேம்பியன் ஆஃப் ஹெல்த்’ விருது மண்டேலாவிடம் தரப்பட்டது.

ஆப்பிரிக்க அமைதிப் பரிசு, 1995 இல், டர்பன் நகரில் நடைபெற்ற விழாவின் போது அவருக்கு அளிக்கப்பட்டது.

லிசோதோவில் காட்சே நகருக்குச் செல்லும் ரஸ்தா, ‘நெல்சன் மண்டேலா ரோடு’ எனப் பெயர் பெற்றது.

பிரிட்டோரியாவில், பிரிட்டோரியப் பத்திரிகையாளர்கள் சங்கம், 1994 ஆம் ஆண்டுக்கான ஆண்டின் சிறந்த செய்திப் படைப்பாளர் (நியூஸ்மேக்கர் ஆஃப் தி ஈயர் விருதை அளித்தது.


வல்லிக்கண்ணன் • 73