பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யூட்டென்ஹேக் நகரின் குடிஉரிமை அவருக்கு வழங்கப்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்கில், தென் ஆப்பிரிக்க மருத்துவக் கல்லூரியின் கெளரவ ‘ஃபெல்லோஷிப்’ வழங்கப்பட்டது.

ஹார்வேர்ட் தொழில் பள்ளியின் ‘ஆண்டின் சிறந்த அரசியல்வாதி’ விருது அளிக்கப்பட்டது.

சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் லண்டனில் மனித உரிமைக் கழகம் என்ற அமைப்பைத் துவக்கியது. ஆப்பிரிக்கத் தலைவர் மண்டேலா அந்த அமைப்பின் கெளரவ சேர்மன் ஆக நியமிக்கப்பட்டார்.

1996 ஆம் ஆண்டில், அயர்லாந்தில், டப்ளின் நகரில் உள்ள ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ என்ற மருத்துவக் கல்லூரி அவருக்குக் கெளரவ ஃபெல்லோஷிப் வழங்கியது.

இந்தியா, புது டில்லியில், சர்வதேச நீதி மற்றும் ஒருமைப்பாட்டிற்கான இந்திராகாந்தி விருது அளிக்கப்பட்டது.

யூதான்ட் சமாதான விருது வழங்கப்பட்டது.

பாமாகோ நாட்டின் ‘நேஷனல் ஆர்டர் ஆஃப் மாலி’ எனும் மாலியின் மிக உயர்ந்த விருது அளிக்கப்பட்டது.

லண்டனில், லண்டன் மாநகரக் குடிஉரிமை தரப்பட்டது.

பிரிட்டனின் பிரிஸ்டல், கேம்பிரிட்ஜ், டிமான்ட்ஃபோர்ட், கிளாஸ்கோ, காலிடோனியன், லண்டன், நாட்டிங்ஹாம், ஆக்ஸ்போர்ட், வார்விக் யுனிவர்சிட்டிகள் மண்டேலாவுக்குக் கெளரவப் பட்டங்கள் அளித்துப் பெருமைப்படுத்தின.

பாரிசில், ஸார்போன் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

ஸ்டெல்லன் பாஸ்க் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.


74 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா