பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்லாந்தில், பாங்காக் நகரில் உள்ள சுலாலாங்கார்ன் யுனிவர்சிட்டி அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

தென் ஆப்பிரிக்காவில், கேப் டவுணில் உள்ள, ‘பென்குரியன் யுனிவர்சிட்டி ஆஃப் தி நெகேவ்’ என்ற பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

பிரிடோரியாவில் உள்ள அமெரிக்கன் ஹெல்த் அசோசியேஷன் சிறப்பு விருது அளித்துக் கெளரவித்தது.

எகிப்து நாட்டில், கெய்ரோவில், ‘காலர் ஆஃப் தி நைல்’ என்ற விருதை பிரசிடெண்ட் ஹோஸ்னி முபாரக் அளித்தார்.

ஸ்காட்லாந்தில் எடின்பரோ நகரின் குடிஉரிமை அவருக்கு வழங்கப்பட்டது.

கேப் டவுண் நகரத்தின் உரிமை வழங்கப்பட்டது.

பிரிடோரியாவில், பிரிடோரியா யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு அளித்தது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் யுனிவர்சிட்டியான ஃபோர்ட் ஹேர் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

தென் ஆப்பிரிக்காவின் ஜூலுலாந்து யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

கார்டிஃப் நாட்டில், கார்டிஃப் நகரம் மற்றும் கார்டிஃப் மாகாணத்தின் குடிஉரிமை வழங்கப்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்கில் கூடிய தென் ஆப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாவது தேசிய மாநாட்டின் போது கிறிஸ் ஹனி அவார்ட் அவருக்கு அளிக்கப்பட்டது.

மொரீஷியஸ் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் தந்தது.


76 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா