பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நெதர்லாந்தில், மிடில்பர்க் நகரில், பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் சுதந்திரப் பதக்கம் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் மிக உயர்ந்த சிவிலியன் விருது ஆன ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் பிரீடம்’ அவருக்கு அளிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜியார்ஜ் புஷ், வாஷிங்டன் நகரில் அதை அளித்தார்.

கறுப்பின மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் தேசியக் கழகம் என்ற அமைப்பு, குழந்தைகளுக்கான மிகச் சிறந்த இலக்கியப் படைப்புக்கான விருதை 2003 ஆம் ஆண்டில் மண்டேலாவுக்கு வழங்கியது.

இந்த விதமாகச் சொந்த நாட்டிலும், உலகத்தின் இதர நாடுகளிலும் நெல்சன் மண்டேலா மக்களாலும் பல்வேறு அமைப்புகளாலும் போற்றிக் கவுரவிக்கப்படும் பெருமையைப் பெற்ற மாமனிதராக விளங்குகிறார்.

வரலாற்றில் இடம் பெற்றுள்ள வேறு எந்தத் தலைவருக்கும் கிட்டாத வரவேற்பும் கெளரவிப்பும் உலகம் எங்கும் மண்டேலாவுக்குக் கிடைத்து வந்திருப்பதை அவரது வரலாறு காட்டுகிறது.

மக்களின் உரிமைகளுக்காகவும் மனித வர்க்கத்தின் முன்னேற்றத்துக்காவும், தன்னலம் துறந்து அயராது பாடுபட்ட இலட்சியவாதி நெல்சன் மண்டேலா அவ்வழியில் பாடுபடத் துணியும் வீரர்களுக்கு வழிகாட்டும் ஒளிச்சுடராகத் திகழ்கிறார்.

வாழ்க மண்டேலா.
★★★

80 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா