பக்கம்:நெற்றிக்கண்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 91

பொருள் மெருகும் கொடுத்து ஓசை நயத்தைச் செப்பனிட வேண்டும்போல் தோன்றினாலும் அப்போது அதைச்செய்ய இயலாமல் சோர்வு வந்து தடுத்தது. காலையில் அதைச் செய்துகொள்ளலாம் என்று எண்ணிச் சுகுணன் கவிதையை அப்படியே விட்டிருந்தான். துரங்கத் தொடங்கியபோது மணி என்ன இருக்கும் என்று நினைவிராத ஏதோ ஒரு நூலிழை விநாடியில் தூக்கம் அவனைப் பற்றி ஆண்டிருந் தது. ஆனால் ஒரு விநாடிதான் தூங்கி முடிந்தது போலிருந் தது. அதற்குள் வேகமாகப் பொழுது விடிந்துவிட்டது. அந்தக் கண நேரத்தைப் போன்ற ஆழ்ந்த, தூக்கத்திலும் அவன் ஒரு கனவு கண்டிருந்தான். 'கடற்கரைத் தாழம்பூ" என்ற கவிதை பூம்பொழிலில் வெளிவந்து அதைத் துளசியும்' படித்துவிட்டு அவனிடம் வந்து கோபத்தோடு ஏதோ ஒரு கேள்வி கேட்பது போன்ற சொப்பனம் அது. •

சாற்றப் பிறரில்லை-போய்ச்

சாரக் கரமில்லை சரியத் தோளில்லை'

என்ற வரிகளை என்ன அர்த்தத்தில் அவன் எழுதி யிருக்க முடியும்? என்று அவனிடமிருந்தே அறிந்துகொள்ள முயலுகிறாள் துளசி. அவன் அதற்குப்பதில் சொல்வதற். குள் உறக்கம் கலைந்து விழித்துவிடுகிறது. அன்று காலை யில் எழுந்திருந்த போதே அவனுக்கு மிகவும் தளர்ச்சியாக இருந்தது. அவன் நீராடித் தலை துவட்டிக்கொண்டு திரும் பிய சமயத்தில் எதிர்பாராமல் பத்திரிகை அதிபர் நாகசாமி யிடமிருந்து அவனுக்கு ஃபோன்வந்தது. அவனுடைய அறை எண்ணுக்கு அவர் ஃபோன் செய்வது எப்போதாவது அபூர்வமாக இருக்கும். அவசர ஆத்திரத்திற்குக் கூப்பிடு வதற்காக அவன் தன் லாட்ஜ் டெலிபோன் எண்ணையும் அறை எண்ணையும், அலுவலகத்தில் கொடுத்திருந்தான். நாகசாமியும் அதை அலுவலகத்திலிருந்துதான் விசாரித்துத் தெரிந்துகொண்டிருக்க முடியும். யாரோ ஒரு முக்கியமான

நெ-7 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/103&oldid=590474" இலிருந்து மீள்விக்கப்பட்டது