பக்கம்:நெற்றிக்கண்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

102 நெற்றிக் கண்

உத்தியோகப் பிரமுகர் டில்லியிலிருந்து தன் வீட்டிற்கு வந் திருப்பதாகவும், அவரை அவனும் சந்தித்து அறிமுகம் செய்துகொள்வது நல்லதென்றும் கூறினார் அவர், சரியாகக் காலை பத்துமணிக்குச் சாந்தோமிலிருக்கும் தமது பங்களா வுக்கு அவனை வந்துவிடச் சொல்லி உத்தரவு போட்டார் அவர். அங்கே போனால் அவரைச் சந்தித்துவிட்டு அப்புறம் அப்படியே காரியாலயத்துக்குப் போகத்தான் நேரம் சரியா யிருக்கும். காலைச் சிற்றுண்டி காபியை முடித்துக் கொண்டு ஒன்பதரை மணிக்கு ஒரு டாக்ளி பிடித்து அவன் புறப்பட் டான். டாக்ஸி நாகசாமியின் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்தபோது முன்புறம் மரத்தடிப் புல் வெளியில் துளசி யும், அவள் கணவனும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. திரிமண விருந்தின்போது அச்சக ஊழியர்கள் அவளுக்கு அன்பளிப்பாக வழங்கிய சுகுணனின் நாவல்கள் சில அவளருகே கிடந்தன. அவள் அந்தப் புத்தகங்களைக் காண்பித்துத் தன் கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண் டிருந்தாள். இதற்குள் டாக்ளி அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைக் கடந்து பங்களாவின் போர்டிகோவுக்குள் போய் நின்றுவிட்டது. அந்த இடத்தில் மறுபடி காரியா லயம் திரும்புவதற்குச் சுலபமாக வாடகை வாகனங்கள். எவையும் அருகில் கிடைக்க வழியில்லை என்பதால் வந்த டாக்ஸியையே சொல்லி நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே போனான் சுகுணன். நாகசாமியும், அவருடைய நண்பரும் முன் ஹாலிலே அமர்ந்திருந்தனர். நாகசாமி சுகுணனை உற்சாகமாக வரவேற்று அந்த நண்பருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். X- .

"இவர்தான் மிஸ்டர் சந்திரகுடன், ஐ.சி.எஸ். டெல்வி யிலே டெபுடி செகரெட்டரியாக இருக்கிறார். எனக்கு மிக வும் வேண்டியவர். சமீபத்தில் அரசாங்கக் காரியமாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு வந்திருக்கிறார். ‘லிட்டரேசரிலே கூட ரொம்ப ஈடுபாடு உண்டு' என்று நாகசாமி சொல்விக் கொண்டே வந்தபோது பைப்பில் புகைத்துக்கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/104&oldid=590475" இலிருந்து மீள்விக்கப்பட்டது