பக்கம்:நெற்றிக்கண்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

քհո՞. பார்த்தசாரதி 1 0 3

அந்த ஐ.சி.எஸ். அதிகாரி, பைப்பை வாயிலிருந்து எடுத்து விட்டு, 'தமிழில் நான் அதிகம் படிச்சதில்லை. மன்னிக்க ஆணும். லிட்டரேசர்னு நாகசாமி சொன்னதை இங்கிலீஷ் என்று மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள்’’ -என்று குறுக்கிட்டார். -

'அப்படியா! மிக்க மகிழ்ச்சி' என்று ஒப்புக்குப் பதில் சொல்லி வைத்தான் சுகுணன். அவனுக்காக நாகசாமி வர வழைத்த காபியைக் குடித்துவிட்டு அவன் தலைநிமிர்ந்த .தும் ஐ.சி.எஸ். அதிகாரி அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.

'தமிழில் ஸ்டாண்டர்டா இதுவரை ஒண்ணுமே வரலே போலிருக்கே: நீங்க என்ன நினைக்கிறீங்க... மிஸ்டர் சுகுணன்...?’’ -

சுகுணனுக்குக் கடுமையான கோபம் வந்தது. ஆனால்

அதை அடக்கிக்கொண்டு, ஸ்டாண்டர்டுன்னா நீங்க எதை அளவுகோலாக வைத்துச் சொல்கிறீர்கள்? அல்லது அது மாணிக்கிறீர்கள்?' என்று கேட்டான். - -

இல்லே! எனக்குத் தெரிந்த மட்டில்தான் சொல் றேன்.' -

உங்களுக்குத்தான் தமிழில் அதிகம் பரிச்சயம் இல்லை யென்று நீங்களே முதலில் சொல்லிவிட்டீர்களே?' என்று அந்தக் கேள்வியின் கடுமை எதிராளிக்குத் தெரிந்து விடாத படி சிரித்துக் கொண்டே அவரைக் கேட்டான் சுகுணன். அந்த விவாதத்தைத் தவிர்க்க விரும்பிய நாகசாமி நடுவில் குறுக்கிட்டு, 'அதிருக்கட்டும்! இப்போது நம் சந்திரகுடன் ஒரு காரியம் செய்திருக்கிறார். அவர் சுற்றிப் பார்த்த நாடு களைப்பற்றி ஆங்கிலத்தில் மிக அற்புதமாக ஒரு பிரயாணக் கட்டுரைத் தொடர் எழுதியிருக்கிறார். அதை நாம் ஏதாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு ஆசை என்றார் நாகசாமி. இதைச் சொல்லிய அளவில் சந்திரசூட்ன் ஐ. சி.எஸ். முகம் மலர்ந்தார். சுகுணன் பரிதாபமாக நாகசாமி மேலும் என்ன சொல்லப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/105&oldid=590476" இலிருந்து மீள்விக்கப்பட்டது