பக்கம்:நெற்றிக்கண்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நெற்றிக் கண்

போகிறாரோ என்பதற்காக அவர் முகத்தைப் பார்த்த தான். -

ரியலி...இட் இஸ் வொண்டர்புல். மிஸ்டர் சுகுணன்' என்று அந்தப் பிரயாணக் கட்டுரைத் தொடரைப் பற்றி மீண்டும் குறிப்பிட்டார் நாகசாமி. சுகுணன் ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் இருந்தான். தமிழ்நாட்டில் மொழியுணர்வும், தரமான இலக்கிய உணர்வும் பெருகாத தற்குச் சமூகத்தில் அதிக வசதியுள்ள சென்ற தலைமுறை உயர்வர்க்கத்தாரும், மிகக் குறைந்த வசதியுள்ள அடி மட்டத்தாருமே காரணமாயிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. உயர்வர்க்கத்தார் தமிழை இலட்சியம் செய்வதில்லை. அடிமட்டத்தாருக்கு வயிற்றைக் கழுவு, வதைத் தவிர வேறெதையும் இலட்சியம் செய்ய நேர மில்லை. ஏதோ சில நடுத்தர வர்க்கத்தார் தான் மொழி புணர்வையும் தங்களுடைய பல சிரமங்களிடையே கட்டிக் காக்க வேண்டியிருக்கிறது. !, .

'சந்திரசூடன் ஐ. சி. எஸ். தாய்மொழிப் பற்றில்லாமல் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துத் தமிழில் அதையே தன் பெயரில்,வரச்செய்ய முடிகிறது. மொழியையும் இலக்கியத் தையும் பற்றிக் கவலையே இல்லாமல் நாகசாமி பல் பத்திரிகைகளை நடத்த முடிகிறது. அடித்துத் தள்ளுகிற: பத்திரிகைக் காகிதங்களை விற்க எங்கெங்கேர் ஏஜண்டுகள் இருப்பது போல் புத்தியின் ஏஜண்டுகளாக இவர்களிடம் என்னைப் போல் சிலர் ஆசிரியர் குழுவில் சிக்கிக் கொள் கிறோம். அவ்வளவுதான்!-என்று வேதனையோடு சிந்தித். தான் சுகுணன். துளசியையும், ஃபோர்மென் நாயுடுவை: யும் ப்ோல் புதிய தலைமுறையின் வளர்ச்சியைப் புரிந்து: கொண்டு சிலர் இரண்டு வர்க்கத்திலிருந்துமே இந்தப் பக்கம் கவரப்படலாம். ஆனால் பலர் இன்னும் கவரப்பட வில்லை என்பது மனத்தை வருத்தத்தான் செய்தது. சொந்த தேசத்தின் இலக்கியப் பாரம்பரியம், செர்ந்த, மொழியின் அழகுகள், சொந்த நாட்டின் பெருமித்ங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/106&oldid=590477" இலிருந்து மீள்விக்கப்பட்டது