பக்கம்:நெற்றிக்கண்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி - 夏鲁岳

இவற்றை எல்லாம் அலட்சியப் படுத்துகிறவர்களைச் சந்திக்க நேரும் போது அவன் மனம் இன்று போல் இப்படித் தான் பல முறை குமுறிக் குமுறி அடங்கியிருக்கிறது.

இப்போது நாகசாமி எதற்குக் கூப்பிட்டனுப்பியிருக்

கிறார் என்பது குறிப்பர்க அவனுக்குப் புரிந்து விட்ட்து. சந்திரசூடனும் அவருடைய ஐ. சி. எஸ். பட்டமும் சேர்ந்து படைத்த ஆங்கிலப் பிரயாணக் கட்டுரைத் தொடரைத் தான் கொண்டு போய்த் தமிழாக்கி அழகுபடுத்தி அவர் பெயரில் பூம்பொழிலில் வரச் செய்யவேண்டும் போலிருக் கிறது. இந்த நூாற்றாண்டில் இந்த இடம் மாறிய ஆசைகள் மனிதர்களுக்கு மிகமிகச் சாதாரணமாக வருகின்றன. 'டாக்டருக்குச் சினிமாவில் நடிக்க ஆசை. நடிகருக்கு அரசியல் தலைவராக நைப்பாசை. ஒட்டல்காரருக்குச் சங்கீதம் பாட விருப்பம்’ என்று கையிலிருக்கிற கடமை யையும் சரியாகச் செய்யாமல், ஆசைப்படுகிற காரியத் .துக்கும் போதிய தகுதியில்லாமல் பலர் வாழ்க்கையைக் குழப்பிக் கொள்வதை அவன் கூர்ந்து கவனித்திருக்கிறான். சந்திரசூடனுக்காக அநுதாபப்பட்டுக் கொண்டே நாகசாமி எடுத்துக் கொடுத்த அந்த டைப் செய்த ஆங்கிலக் கத்தையை வாங்கிக் கொண்டான் அவன். மற்றொரு பெரிய அட்டைப் பெட்டியில் ஒரு வண்டி வெளிநாட்டுப் புகைப் படங்களையும் அள்ளிப்போட்டு எடுத்துக் கொடுத் திருந்தார் சந்திரசூடன்.

'ஒரு பத்து வாரம் வருமில்லையா?’ என்றார் நாகசாமி.

'வரலாம் பார்க்கிறேன் சார்..."

"எப்படியும் பார்த்துப் போட்டுடனும்...நல்லாத்தர் அணிருக்கும்.' என்று மறுபடியும் அழுத்தினார் நாகசாமி.

"ஐ திங்.." என்று சந்திரகுடன் வேறு சுகுணனிடம் ஏதோ பேசத் தொடங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/107&oldid=590478" இலிருந்து மீள்விக்கப்பட்டது