பக்கம்:நெற்றிக்கண்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.6 . நெற்றிக் கண்

"ஐ வில் கோ த்ரூ தி ஸ்கிரிப்ட், இன்பார்ம் யூ. சார்...' என்று அவன் அவர் பேச்சைக் கத்தரித்த விதம் அவருக்கே சங்கடத்தை உண்டு பண்ணினாலும் அவனை நோக்கி வாடிய முகத்தோடு புன்முறுவல் பூக்க முயன்றார் சந்திரசூடன். சுகுணன் அப்படிப் பேச்சை வெட்டியது: நாகசாமிக்குக்கூடப் பிடிக்கவில்லை. அவர் முகமும் சற்றே வாடியது. இதற்குள் துளசியும் அவள் கணவனும் கூடத் தோட்டத்திலிருந்து உள்ளே வந்துவிட்டார்கள். அவள் கையிலிருந்த சுகுண்னின் நாவல் புத்தகங்களைத் தற்செய லாகக் கவனித்த சந்திரசூடன் ஐ. சி. எஸ். அவற்றை அவளிடமிருந்து கேட்டு வாங்கி அலட்சியமாகப் பக்கங் களைப் புரட்டினார். . - .

"இந்த இரண்டையும் பதினேழாவது முறையாக இப்ப படிக்கிறேன் மாமா...' என்று துளசி அந்த ஐ.சி.எஸ். காரரிடம் ஆர்வமடங்காமல் சொல்லியபோது,

'சச் எ.கிரேஸி ரைட்டிங்...' என்று ஏதோ சில ஆங்கில வார்த்தைகளை மென்று முழுங்கினார் அவர். சுகுணன் அங்கு வந்திருப்பதைத் தான் அறிந்த இந்தக் கணமே மறுபடி தான் அந்த வரவைக் கொண்டாட விருப்பியவளைப் போல், சாப்பிட ஏதாவது கொண்டு. வருகிறேனே? ஜூஸ், காபி, டீ. ஏதாவது..." என்று. அவனருகே வந்து முகம் மலர்ந்தாள் துளசி,

'ஆயிற்று...' என்று சுருக்கமாகவும் அடக்கமாகவும்: பதில் வந்தது சுகுணனிடமிருந்து. அவன் விட்ை பெற்றுக் கொண்ட போது துளசி மட்டும் வாயில்வரை வந்து வழி யனுப்பினாள். டாக்ளி நகருவதற்குமுன் ஒரு விநாடி கார்க் கதவருகே நெருங்கிய துளசி, 'இப்படி அகாலத்தில் எதற். காகக் கடற்கரை மணலில் கால் வலிக்கச் சுற்றுகிறீர்கள்: தூக்கம் கெட்டால் உடம்பு என்னத்திற்காகும்?'-என்று. மெல்லிய குரலில் விசாரித்த போது, "நான் எங்கே கடற். கரைக்கு வந்தேன்? நேற்று அறையை விட்டு நான் எங்குமே. போகவில்லையே?’ என்று திட்டமிட்டுப் பொய் சொன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/108&oldid=590479" இலிருந்து மீள்விக்கப்பட்டது