பக்கம்:நெற்றிக்கண்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 107

னான் அவன். துளசியின் முகம் பின்னால் மறைந்தது. டாக்ஸி விரைந்து விட்டது. கடற்கரையில் முதல் நள்ளிரவு தான் பார்த்தது அவன் தானா இல்லையா என்று தெரிந்து கொள்ளத் துளசி இந்தக் கேள்வியை மிகவும் சாதுரிய மாகக் கேட்டிருந்தாள். அவள் அதைத் தெரிந்து கொண்டால் வீணாக மனத்தை அலட்டிக் கொள்வாளே என்பதற்காக அவன் பொய்தான் சொன்னான். நாம் பார்த்தது சுகுணனில்லை-பாவம்! வேறு யாரோ போலிருக்கிறது'-என்று நினைத்தாவது அவள் நிம்மதி பெறட்டுமே என எண்ணியே அவன் அதை மறைத்தான். "தான் கணவனோடு காரில் உல்லாசமாகக் கடற்காற்று வாங்க வந்ததாக-அவன் எண்ணி மறுகுவானோ என நடுங்கும் அவள் உள்ளத்துக்கு அந்த நடுக்கத்தையே மேலும் வளர்க்கும் பதிலைத் தான் தெரிவிக்கலாகாது என்ற காதல் பெருந்தன்மையை அந்தக் கணத்தில் சுகுணன் காப்பாற்றினான். காதல் என்பது பின் வேறு எங்கு தான் இருக்கிறது? அவன் அகாலத்தில் கடற்கரை மணலில் அநாதை போல் கால்தேயச் சுற்றித் திரிகிறானே?’ என அவள் இன்னும் உருகுகிறாள். "அது அவளுக்குத் தெரியாம் லிருந்தால் அவள் மனம் புண்படாதே என்று அவன் அவளுக்கு இரங்கிப் பொய் சொல்லுகிறான். அசல் காதலில் தான் எப்படி எ ப் ப டி த் தியாகம் செய்கிறார்கள் மனிதர்கள்? எவ்வளவு சத்தியமாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கிறார்கள்? தன்னுடைய நம்பிக்கைகளை ஒருவனிடம் பூரணமாக ஒப்படைத்துவிட்ட ஒருத்தியின் உடம்பை அப்புறம் வேறு யார் மணந்து கொண் டால்தான் என்ன? உண்மையில் அந்த நம்பிக்கைகளை ஆள்கிறவன் அல்லவா அவள் மனத்தை ஆள்கிறான்? உடம்பு மிகமிகச் சிறிய உண்மையாகிவிடுகிற அளவு காத் லில் மனம் தொடர்பான இரகசியத் தியாகங்கள் ஆதரவு அபிமான அந்தரங்கங்கள் மலைமலையாக எவ்வளவோ இருக்கின்றனவே! காரியாலயத்திற்குப் போகிற வழியெல் லாம் டாக்ஸியில் இந்த நளின நினைவுகளே அவன் மனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/109&oldid=590480" இலிருந்து மீள்விக்கப்பட்டது