பக்கம்:நெற்றிக்கண்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 9

போது அந்த விநாடிவரை சிரமப்பட்டு மறக்க முயன்று ஓரளவு வெற்றியும் கண்டிருந்த துளசியின் நினைவு தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டது அவனுக்கு. -

துளசி எந்த ஒருவிநாடியில் அவன்முன்-அல்லது அவன் நினைவின் முன் சாசுவதமாக நின்றாளோ-அந்த ஒரு விநாடி இன்று பொய்யாகியிருக்கலாம். ஆனால் அது எந்த ஒரு விநாடியில் நிகழத் தொடங்கியதோ அந்த ஒரு விநாடி உண்மையாகத்தான் இருக்க முடியும். புகழையும்-பொறுப் பையும் தாங்குகின்ற ஆயுதமாய்ப் பழியையும் புகழையும் நிர்ணயிக்கற சக்தியாய் அவன் கையிலிருக்கிற எழுது கோலைப் போல் அவன் நினைவும் அவனுள் ஒரு சாசுவதமே.

ஆனால் இனி அப்படி நினைப்பதிலும்கூட ஓர் அர்த்தமு மில்லை. இந்த நேரத்திற்குள் அவள் யாருக்கோ சொந்த மாகியிருப்பாள். முகூர்த்த நேரம் அதிகாலையில் ஐந்தரை மணிக்குமேல் ஆறேகால் மணிக்குள் ஏதோ ஒரு நாழிகை என்று தானே திருமணப் பத்திரிகையில் போட்டிருந்தது? தன் மனத்தை அணு அணுவாக அறுக்கும் அந்த நாளில் அந்தத் திருமண நிகழ்ச்சியன்று பட்டினத்திலேயே இருக்கக் கூடாதென்றுதானே ஏதோ பெரிதாக எழுதிக் குவித்து. அள்ளிக்கொண்டு போய்விடப் போவதுபோல ஒரு பொய் யைத் தன் மனத்துக்குத் தானே கற்பித்துக்கொண்டு இந்தக் கிராமத்துக்கு ஓடிவந்திருந்தான் சுகுணன்? -

எங்கு ஓடிவந்தாலென்ன? நினைப்பிலிருந்து எதையும் வெளியிலெடுத்து எறிய முடிவதில்லையே? உடம்பைவிட வேகமாகப் பிரயாணம் செய்து நினைத்த இடத்துக்குப் போக முடிகிற இந்தச் சக்தி வாய்ந்த மனமும் சக்திவாய்ந்த சிந்தனையும்தான் அவனுடைய எழுத்தின்-ஆற்றல் செப்பிடு வித்தைக்காரனின் மாத்திரைக் கோலைப்போல நினைத்ததைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சக்தி அவன் எழுத்துக்கு இருந்தது. அதே நினைவும், சிந்தனை பும், துளசியைப் பற்றி நினைக்கும் போதும் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/11&oldid=590377" இலிருந்து மீள்விக்கப்பட்டது