பக்கம்:நெற்றிக்கண்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.8 நெற்றிக் கண்

தில் ஓடின. துளசியின் மென்மை அவனை உள்ளுர அவளுக் காக இரங்கச் செய்தது. பேதைகளை மன்னிக்கத் தயாரா விருப்பவன்தான் ஆண் மக்களிலேயே தீரனாக இருக்க முடியுமென்று இப்போது அவன் நம்பினான். துளசியைக் கடந்த சில நாட்களில் சில சொற்களில் சில வாக்கியங் களில் சில சந்தர்ப்பங்களில்தான் புண்படுத்தினாற்போல் நடந்து கொண்டதற்காகக்கூட அவன் மனம் இப்போது தனக்கு உள்ளேயே வருந்தி அழுதது. நரம்புகளில் முறுக்குத் தளர்ந்ததும் வாத்தியங்களின் இசையில் இனிமை குறைவது போல் உடம்பைக் கட்டி யாளும் காதலில் நாதக் கட்டு குலைந்து அபசுவரம் விழுகிற நேரமும் வரலாம். மனத்தைக் கட்டியாளும் காதல் என்றும் சுறுதி பேதமில்லாதது என்ப தற்கு உவமையே தேட வேண்டியதில்லை என அவன் எண்ணினான்.

அவன் காரியாலயத்திற்குள் நுழைந்ததும் நுழையாதது மாகச் சர்மா அவனுடைய அறைக்குத் தேடி வந்திருந் தார். - . -

  • சுகுணன்! உங்ககிட்ட நாகசாமி சந்திரசூடன் ஐ. சி. எஸ்ஸோட டிராவல் எஸ்ஸேஸ். ஏதோ கொடுத் திருக்காராமே!...” . >

"ஆமாம்! அதற்கென்ன வந்தது இப்போது?’’ "ஒண்னும் வரலே! இப்பத்தான் அந்த விவரத்தை எனக்கும் ஃபோன் பண்ணிச் சொன்னார்..."

"என்ன செய்யச் சொன்னார் உங்களை?' சர்மா இதற்குச் சரியாகப் பதில் சொல்லாமல் மழுப் பினார். நாகசாமியிடம் ஒரு கெட்ட குணம். ஒரே காரியத்தை ஒரே சமயத்தில் பத்துப் பேரிடம் சொல்லி வைப்பார். அதனால் பத்துப் பேருக்கும் அந்தக் கர்ரியத் தின் மேல் சிரத்தை வராது. அவரைப்போல் மனிதர்கள் மேல் அவநம்பிக்கைபடும் பிறவி உலகில் வேறொன்று இருக்கவே முடியாது. தன்னைக் கூப்பிட்டு அதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/110&oldid=590481" இலிருந்து மீள்விக்கப்பட்டது