பக்கம்:நெற்றிக்கண்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 09

கொடுத்துவிட்டு அதற்கு மேலும் அவநம்பிக்கையோடு நாக சாமி அதே விஷயத்தைச் சர்மாவுக்கும் ஃபோன் செய்திருப் பதை அவன் விரும்பவில்லை. சர்மாவோ மேலும் மேலும்,

அவனை துளைத்தார்.

"கட்டுரை எப்படி இருக்கு ஏதாவது தேறுமா?’’ 'பக்கத்து சண்முகபவனில் சரியாக எழுதப் படிக்கத் தெரியாத டேபிள் கிளீனர் பையன்கள் சில சமயம் நீரும் நானும் காபி குடிக்கிறபோது பத்திரிகையில் போடச் சொல்லித் தமிழில் கவிதை எழுதிக் கொடுப்பார்களா இல்லையா? அப்படித்தான் இருக்கும் இந்த ஐ.சி.எஸ். காரரின் எழுத்தும்'- என்று சர்மாவுக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்ததோடு, அந்தக் கத்தையை அவரிடமே தாக்கிக் கொடுத்துவிட்டான் சுகுணன், சர்மா கொண்டாட் டத்தோடு அதை வாங்கிக் கொண்டு போனார். இந்த வித மான பெரிய மனிதர்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற். காகச் சர்மர் எதையும் செய்வார். அவருடைய என்சைக் ளோபீடியாவில் ஜெர்னலிசம் (பத்திரிகைத் தொழில்) என்பதற்கே பெரிய மனிதர்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் ஒரு கருவி என்பதாகத்தான் அர்த்தம். எனவே அதைத் தமிழ்ப் படுத்தும் பொறுப்பை அவரிடமே விட்டு விட்டான் சுகுணன், கொஞ்ச நேரத்தில் ஃபோர்மென் நாயுடு வந்தார். தனது கடற்கரைத் தாழம்பூ கவிதை யைச் செப்பனிட்டு அவரிடம் அச்சுக்குக் கொடுத்தான் அவன். நாயுடு நகர்ந்ததும் டெலிபோன் மிணி அடித்தது. நூறு துப்பறியும் நாவல்களுக்கு மேல் எழுதிய தலைசீவி என்னும் புனைப்பெயருக்குரிய எழுத்தாளரின் குரல் டெலிபோனில் சுகுண்னிடம் இரைந்தது.

"என்ன சார் இது! அநியாயமா இருக்குது. ந்ம்ப தாவல் ஏரிக்கரைப் படுகொலை யை ரிவ்யூவுக்கு அனுப்பினா அதுக்கு நீங்க இப்படித்தான் மட்டமா

மதிப்புரை எழுதறதா?” .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/111&oldid=590482" இலிருந்து மீள்விக்கப்பட்டது