பக்கம்:நெற்றிக்கண்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 நெற்றிக் கண்

"எப்படி எழுதியிருக்கிறது? எங்கே படியுங்களேன்: கேட்கலாம்...' வேண்டுமென்றே அவர் வாயாலேயே அதை ஒருமுறை படிக்கச் செய்ய வேண்டுமென்று குறும்புத். தனமாகச் சுகுணன் விரும்பினான். அவர் அதைப் ஃபோனில்: படித்தார்.

"மன்னிக்கவும்: இந்நாவலை ஏற்கெனவே ஆங்கிலத். தில் ஆர்தர் கானன்டாயில் என்பார் எழுதியிருக்கிறார். ஆர்தர் கானன்டாயில் எப்போது தமிழ்நாட்டில் திரு. அவதாரம் செய்து தலைசீவி என்று புனைப்பெயரும் சூடிக் கொண்டார் என்பது நமது காரியாலயத்தாருக்கு, இன்னும் விளங்கவில்லை...' -

"இப்பிடியா எழுதுவாங்க...' "வேறு எப்படி எழுதவேண்டும் சொல்லுங்களேன்?' -எதிர்ப்புறம் கோபத்தோடு டெலிபோனை வைத்து விட்டார் தலைசீவி. சுகுணனும் சிரித்துக்கொண்டே டெலி போனை வைத்துவிட்டுக் காரியாலயத்திற்கு வந்திருந்த தபால்களைக் கவனிக்கத் தொடங்கினான். கதவு திறக்கப் பெற்று எதிரே நிழல் தட்டியது. அவன் தலை நிமிர் வதற்குள் அந்த மென்மையான குரல் அவன் செவிகளில்: ஒலித்தது.

"மன்னிக்கவும்; உள்ளே வரலாமா? -என்று கேட்ட படி கைகளில் புத்தக அடுக்குடன் தயங்கி நின்றாள் ஒரு. பெண். பார்த்தால் ஏதோ கல்லூரியில் படிக்கிற பெண் மாதிரித் தோன்றினாள் அவள்.

வாருங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?' "நான் நேற்றுத்தான் உங்களுடைய பாலைவனத்துப் பூக்கள்' என்ற நாவலைப் படித்து முடித்தேன். உடனே

உங்களைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

"உட்காருங்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/112&oldid=590483" இலிருந்து மீள்விக்கப்பட்டது