பக்கம்:நெற்றிக்கண்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五丑4 நெற்றிக் கண்

துணையாயிருக்கிறார்கள். இன்னும் மூன்று பேர்கள் குழந்தைகள். பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். நான் தர்ன் கல்லூரியை எட்டிப் பார்த்திருக்கிறேன். சகோதரி களின் சம்பாத்தியத்திலிருந்து மாதா மாதம் ஏதோ எனக்குக் கொஞ்சம் பணம் வரும். ஆனால் ஹாஸ்டல் கட்டணத்திற்கும் கல்லூரிக் கட்டணத்திற்கும் அது பற்றாது. இங்கு மைலாப்பூரில் எங்களுர் டாரக்டரம்மாள் ஒருத்தி இருக்கிறாள். நான் கல்லூரி விடுதியின் சுவர்களுக் குள்ளே சிறைப்பட்டு விடாமல் வெளியே தனிப்பட்டவர் களால் பெண்களுக்கென்று நடத்தப்படும் ஒரு சேவாதள ஹாஸ்டலில் தங்கியிருப்பதால் காலை, மாலை-விடுமுறை நாட்களில் வெளியே போக வர வாய்ப்பு உண்டு. காலையும் மாலையும் விடுமுறை நாட்களிலும் அந்த டாக்டரம்மாள் விட்டில் நோயாளிகளின் மாதாந்தர ஃபீஸ் பில் போடுவது ஆஸ்பத்திரித் தேவைகளை அவ்வப்போது வாங்கிவைப்பது, ஸ்டோர் ரூம் பொறுப்பு ஆகியவற்றைக் கவனித்து வந்தேன். மாதம் நூறு ரூபாய் கொடுத்துக் கொண்டிருந் தார்கள். நானும் ஓரளவு செளகரியமாகவே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். ஆண்கள் நாணயமாகவும் சமுதாயப் பொறுப்புடனும் நடந்துகொள்ளத் தயாரா யிருந்தால்தான் பெண்கள் எந்த இடத்திலும் எந்த நிலை யிலும் உத்தியோகம் பார்க்கலாம். ஆனால் பல இடங்களில் அப்படி இருப்பதில்லை. முக்கால்வாசி நேரம் வெளியில் "விசிட்'களுக்கும் பிரசவம் பார்க்கும் டாக்டரம்மாள் என்பதால் சில சமயங்களில் அகாலமான இரவு நேரங்களி' லும்கூட வெளியே சுற்றப்போக வேண்டியிருக்கும். அந்த அம்மாளுக்கு. அவளுடைய கணவர்...' என்று சொல் வியவள் சிறிது தயங்கிவிட்டு. ’’அவர் பெயரை நான். இங்கே சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். ஊரறிந்த பிரமுகர் அவர் பக்திமான்களுக்கு நடுவே நிரந்: தரமான ஆஸ்திகராகவும் அங்கீகரிக்கப்பட்டு விட்டவர். தனிமையில் என்னிடம் நேர்மைக் குறைவாக நடந்து கொள்ள முயன்றார் என்ற நான் மட்டுமறிந்த உண்மையை. உலகத்துக்குச் சொல்ல முயல்வதால் ஒரு பயனுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/116&oldid=590487" இலிருந்து மீள்விக்கப்பட்டது