பக்கம்:நெற்றிக்கண்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 19

உதவியை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் நீங்கள் படிப்பைத் தொடருவதற்கு என்னால் முடிந்தவரை நான் உதவ முடியும் பின்பு உங்களால் எப்போது முடியுமோ அப் போது நீங்கள் எனக்குத் திருப்பிக் கொடுத்தால் போதும்...'

'இந்த உதவியைக் கேட்கவோ ஏற்றுக் கொள்ளவோ கூட எனக்குப் பயமாயிருக்கிறது சார்! பாவம் உங்களுக்கு .உங்கள் குடும்பத்தில் எத்தனை சிரமங்களோ?’’

'குடும்பமா? எனக்கா? இன்று இந்தத் தேசத்தில் இப்படி உங்களைப் போல் கஷ்டபடுகிற சகோதரிகள் எல்லாரும் என் குடும்பம்தான். இன்று வரை வேறு குடும்ப பாரம் எனக்கில்லை. என்று சொல்லி அவளை நோக்கிப்

புன்முறுவல் பூத்தான் சுகுணன்.

என்னால் உங்களுக்கு அநாவசியமான சிரமம்...'

"சிரமம் என்ன இருக்கிறது. இதில்? ஏதோ இன்று நான் உதவக்கூடிய நிலையிலிருக்கிறேன். நாளை எப்ப .டியோ? உதவக் கூடிய நிலையிலிருக்கிற போது தான்

இன்னொருவருக்கு உதவி செய்கிற மகிழ்ச்சியையும் பெரு. மிதத்தையும் நான் அடைய முடியும்.'

"உங்களைப் போல் வாழ்க்கையை இத்தனை கருணை மயமான கண்களோடு பார்க்கிறவர்கள் அபூர்வம் சார்...'

'தயவு செய்து உங்களுக்கு உதவுவதை எனது ஒரு கடமையாக எண்ணித் திருப்திப்பட விடுங்கள். நீங்கள் என்னிடமே அதை வியக்கவோ புகழவோ செய்வது எனக்குப் பிடிக்காத காரியம். சகோதரிகள் தமையனிடம் பெறுகிற உதவியை எங்காவது புகழ்வதுண்டா மிஸ், கமலம்?' - - - - - - . . . .

கமலம் கண்களில் நீர்நெகிழ அவனை நோக்கிக் கை கூப்பினாள். அங்கு வந்த நாளிலிருந்து இல்லாத அபூர்வ வழக்கமாய் அன்று முதன் முதலாக ஆபீஸ் கணக்கில் ஒரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/121&oldid=590493" இலிருந்து மீள்விக்கப்பட்டது