பக்கம்:நெற்றிக்கண்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 芷名夏

ஆத்திரத்தோடு பதில் கூற நினைத்து முடிவில் அவரைத் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வைக்கும் படியான பதிலாக அதைக் கூறினான் சுகுனன். -

'ஒன்று விட்ட பெரியப்பாவின்பெண் எனக்குத் தங்கை முறைவேணும்'-என்று அவன் உறவு சொன்னவுடன்,

'மன்னிக்கணும்! எப்படியோ விசாரித்து விட்டேன்'என்று வார்த்தைகளிலும், முகத்திலும், அசடுவழிய நின்றார் சர்மா. அவருடைய விசாரணையிலிருந்த அநாகரிகமான வார்த்தை களைக் கேட்டுக் குமுறிய காரணத்தினால் அவரைச் கூசச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடனே தான் வேண்டுமென்று இப்படி ஒர் உறவைக் கற்பித்தான் சுகுணன். இந்தப் பெண் கமலத்தைந் போல் எத்தனையோ அபலைகள் பாரத தேசம் எங்கும் நகரத் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டு இருப்பது போல் ஒரு பிரமை அன்று அவன் மனத்தில் தோன்றியது. அதன் காரணமாக மனமும் வலித்தது. சமூகத்தில் தனக்குக் கிடைத்துக்கொண் டிருப்பதைவிட அதிகமான கெளரவத்துக்குப் பேராசைப் :படும் அந்த ஐ சி. எஸ். அதிகாரியையும், சமூகத்தில் தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கெளரவத் துக்கே போராடும் இந்தப் பெண்ணைப் போன்ற அபலையையும் சேர்த்து நினைத்தால் இந்த முரண்பாட்டையே அடிப் படையாக வைத்து இன்னும் நிறையச் சிந்திக்க வேண்டும் போல மனம் கனத்தது சுகுணனுக்கு.

'கமலத்தைப் போன்றவர்களின் குருத்துப் பருவத்து வாழ்வை இந்த வறுமையும் வசதிக் குறைவும் எப்படி எப்படி வாட்டி விடும்?'-என்பதை மற்றவர்கள் உணர முடிவதை விடச் சுகுணனால் அதிகம் உணர முடிந்ததற்குக் காரணம் இளமையில் கல்லூரிப் படிப்பின்போது காலை மாலை வேளைகளில் ஒரு மார் வாரி கடையில் கணக்கெழுதிச் சம்பாதித்துத் தான் துயருற்ற அநுபவங்கள் அவனுக்கு இன்னும் மறக்கவில்லை. தகப்பன் சம்பாதித்துக் கட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/123&oldid=590495" இலிருந்து மீள்விக்கப்பட்டது