பக்கம்:நெற்றிக்கண்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி ‘I 23

இருந்ததை இன்றும் அவனால் நினைவுகூர முடிந்தது. அன்று தொடங்கிய அந்தத் தாகம்தான் இன்று இந்த நக்கீர தைரியமாக மாறியிருக்கிறதோ என்று கூட அவன் தனக்குத் தானே சிந்தித்ததுண்டு. நக்ரே தைரியத்தினால் வாழ்க்கை யில் சோதனைகளும் எதிர்ப்புகளும் தான் அதிகமாகுமென்று அவனால் உணர முடிந்தும் என்ன காரணத்தினாலோ அந்தத் தைரியத்தை மட்டும் அவனால் விட்டுவிட முடிய

வில்லை. நெஞ்சுக் குழியிலிருந்து தண்ணீர்த் தாகம் எடுப்பதுபோல் மனித ஆன்மாவுக்குள் ஒரு தாகம் உண்டு.

அதுதான் சத்திய தாகம். சத்தியதாகமுள்ளவன் வாழ்வின் சுகங்களை அடைய முடியாது போகலாம். ஆனால் அவனுடைய அந்தத் தாகமே அவனுக்கு ஒரு பெரிய சுகம் என்பதை அவன் மட்டுமே உணர்வான். அப்படி ஒரு தாகத்தில் சுகத்தை அநுபவித்தவன் அதை விடவே (іріў. யாது. சுகுணனாலும் அந்தச் சுகத்தை விட முடிய வில்லை.

அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த இதே வேளையில் தற்செயலாகச் சுபாவமான அந்தச் சத்திய தாகத்தையும், நக்கீர தைரியத்தையும் காண்பிக்க வேண்டிய சர்த்தர்ப்பமொன்று அந்தக் காரியாலயத்தில் நேரிட்டது. என்ன காரணத்தினாலோ அன்று காலையில் நாகசாமியையும் அந்த ஐ.சி.எஸ். அதிகாரியையும் சந்தித்த விநாடியிலிருந்தே இந்தத் தாகம் குமுறியது. அந்தப் பெண் கமலம் வந்து கூறிய துன்பங்கள் அதை வளர்த்து விட்டி ருந்தன. இப்போது பூம்பொழில் அட்வர்டிஸ்ட்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யம் வந்து மறுபடியும் அந்தத் தாகத்தைப் பெருக்கினார். சுகுணனுக்கும் ரங்கபாஷ்யத் துக்கும் அடிக்கடி இப்படித் தகராறுகள் வர வாய்ப்பு உண்டு. ஆனால் பத்திரிகையின் இலக்கியத் தரத்தையும் அதன் உள்ளடக்கத்தினால் அதற்குக் கிடைக்கிற பெருமை யைக் கட்டிக் காக்க வேண்டிய ஆசிரியரின் பொறுப்பையும் சுகுணன் ஒரு .ே பாது ம் நெகிழ்த்தவோ, விட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/125&oldid=590497" இலிருந்து மீள்விக்கப்பட்டது