பக்கம்:நெற்றிக்கண்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 28 நெற்றிக் ಹ65

சர்மாவிடமும் சீறினான் அவன். தனக்கு வேண்டியவர் போல் இப்படி இங்கே வந்து அநுதாபப்படுகிறார் இவர் தான் சொல்லிய இதே கடுமையான வாக்கியங்களைச் சாயங்காலம் ரங்கபாஷ்யத்திடமும் போய்ச் சொல்கிற கெட்ட குணம் சர்மாவுக்கு உண்டு என்பது சுகுணனுக்குத் தெரியும். அவர் போய்ச் சொன்னாலும் சொல்லட்டு மென்று தான் பேசியிருந்தான் அவன். அசத்தியமயமாக வாழ்கிற யாரை எதிரே சந்தித்தாலும் இந்த இருளினருகே அவன் மனத்தின் சத்தியதாகமாகிய ஒளி பெருகித் தோன் றும். சர்மாவின் புறம் பேசும் இழி குணம் தெரிந்திருந்தும் அவர் காது கேட்கும் படியாகவே, ரெளடியாயிருந்தால் ரயில்வே பிளாட் பாரத்தில் திரிய வேண்டும்' என்று ரங்க பாஷ்யத்தைக் குறித்து அவன் பேசியதற்குக் காரணம் உள்ளே அநியாயத்தைக் கண்டு குமுறி அளவற்றுப் பெருகிய நக்கீர தைரியம்தான். தன் மான்மும் நேர்மையு முள்ள ஒவ்வொருவனுடைய இரத்தத்திலும் இப்படி ஒரு நக்கீர தைரியம் பெருகி ஓடுவதைத் தவிர்க்க முடியாது என்பதைச் சுகுணன் உணர்ந்திருந்தான். ஈரம் பட்டு நமத்துப் போகிற தீக்குச்சி போல் மனிதர்களுடைய சத்தியம் என்ற நெருப்பில் வாழ்க்கைப் பயம் ஈரமாகப் பெருகி நனைந்து போகாமல் நிமிர்ந்து நிற்கிறவன் யாரோ அவனெல்லாம் இந்த நக்கீர தைரியத்தைத்தான் நாகரிக ..வீரமாகப் போற்றிப் பாதுகாக்க முடியும். பத்திரிகை யாள னின் அல்லது அறிவு இயக்கத்தைச் சேர்ந்தவனின் ஒரே பெருமிதம் இந்த நக்கீர தைரியம் தான் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். சென்னைப் பட்டினத்துத் தெருக்களில் காகித ஆலைகளாக நடக்கும் பல பெரிய பத்திரிகை நிறுவனங்களில் உதவி ஆசிரியர்களாகவும். பிழை திருத்துபவர்களாகவும், இருக்கிற பலர் முதுகும் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கைகளும் வளைந்து கூனிப் போய், 'ஏதோ காலந்தள்ளணுமே சார் -என்று ரொம்பவும் அசதியாக வாழ்வதைப் பார்த்துக் குமுறி .யிருக்கிறான் சுகுணன். ஒரு முறை அகில இந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/130&oldid=590502" இலிருந்து மீள்விக்கப்பட்டது