பக்கம்:நெற்றிக்கண்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 நெற்றிக் கண்

வதையும் படம் பிடித்துப் போடுவதற்காக அவர்களுக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிற சிலரும் மந்திரிகள் பெயரில் கட்டுரை எழுதி வெளியிட்டு அவர்களுக்கு தங்கள் புத்தியை அடகு வைக்கவோ, இரவல் கொடுக்கவோ செய். வதன் மூலம் சோரம் போகிறவர்கள் சிலருமாகச் சமூகத் தின் ஒளியற்ற பகுதிகளில் எங்கெங்கோ எப்படி எப்படியோ திரிய வேண்டியவர்கள் எல்லாம் சந்தர்ப்ப வசத்தினால் புனிதமான- வீர மா ன பத்திரிகைத் தொழிலில் புகுந்து அந்தத் தொழிலுக்கு வேண்டியஎந்த நெற்றிக்கண் திறந்தாலும் அசத்தியத்துக்கு அஞ்சாத நக்கீர தைரியம் சிறிதுமின்றி இருக்கிறார்கள். நக்ரே தைரியத்தினால் போலிப் பெரிய மனிதர்களின் கோபத்துக்கும் சமூகத்தின் சாபத்துக்கும் ஆளாக நேரிட லாம். ஆனாலும் அந்தத் தைரியம் தான் பத்திரிகை யாளரின் சேம நிதி. அதைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவன் பத்திரிகையாளனாய் இருப்பதற்கே தகுதி யில்லை' - என்று சில கூட்டங்களில் உணர்ச்சி வசமாகக் குமுறிப் பேசிப் பேசி அதன் காரணமாகச் சிலருடைய விரோதத்தையும் சுகுணன் சம்பாதித்துக் கொண்ட துண்டு. - - " . .

ஃபோர்மென் அன்று மாலை மூன்று மணிக்கு மேல் அடுத்து வருகிற வாரத்துப் பூம்பொழிலின் மூன்றாவது ஃபாரத்தை மேக்கப் செய்து க்ொண்டு வந்து கொடுத்த போது அதில் தான் விரும்பியபடியே பத்துப் பக்கம் கதை யும் ஆறு பக்க விளம்பரமும் மட்டுமே வந்திருப்பதைச் சுகுணன் கண்டான். ரங்கபாஷ்யம் தன்னை மீறி எதுவும் செய்யவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும் தன்னுடைய நியாயமான வெற்றியையும் அவருடைய சரி யான தோல்வியையும் அவர் கைப்படவே உறுதி செய்து கொண்டுவிட வேண்டுமென்று சுகுணனுக்குத் தோன்றி யது. அந்த ஃபாரத்தின் மேல் அதை அப்படியே ஒப்புக் கொள்வது போல் ரங்கபாஷ்யத்திடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டு வருமாறு சொல்லிச் சிரித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/132&oldid=590504" இலிருந்து மீள்விக்கப்பட்டது