பக்கம்:நெற்றிக்கண்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது அத்தியாயம்

"இன்னொருவர் மேல் மனப்பூர்வாக அன்பு செய்வதாலும், இன்னொருவரால் மனப்பூர்வமாக அன்பு செய்யப்படுவதாலும்தான் மனிதர்கள் கிமிர்ந்து கடக்க முடிகிறது.'

ரிங்கபாஷ்யம் கையெழுத்திட்டு அனுப்பிய அந்த ஃபாரத்தைத் திருத்திச் சரிசெய்து நாயுடுவிடம் கொடுத்து விட்டு அன்று மாலை நாலரை மணிக்கு மவுண்ட் ரோட்டில் சங்கக் கட்டிடத்திற்குள் உழைக்கும் பத்திரிகையாளர்கள் ஆனியனின் செயற்குழுக் கூட்டம் இருப்பதனை நினைவு கூர்ந்தவனாக அதற்குப் புறப்பட்டான் சுகுணன். செயற். குழுவில் அவனும் இருந்ததனால் போய் ஆகவேண்டும் என்ற. கடமை தவிரவும் அன்று ஒரு முக்கியமான தீர்மானம் 'கொண்டுவரப்பட இருந்தது. அந்தத் தீர்மானத்திற்கு. உத்தியோக பயத்தின் காரணமாகச் சிலருடைய எதிர்ப்பும் இருந்தது. ஆனால் ககுணனும் அவனையொத்த முற்போக். கான எண்ணமுடைய சிலரும் தீர்மானத்தை எப்படியும். திறைவேற்றி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந். தனர். சில பத்திரிகைக் காரியாலயங்களில் நிர்வாகிகள் உழைக்கும் பத்திரிகையாளர்களை நேரடியாகவோ மறை முகமாகவோ மரியாதைக் குறைவாக நடத்துவதாய்ப் புகார்கள் நிறைய வந்திருந்தன. ஒரு பத்திரிகைக் காரியாலயத்தில் உதவியாசிரியர்களுக்கும் பிழை திருத்து வோருக்கும் காரியாலய நேரத்தில் வெளியிலிருந்து யார் எவ்வளவு முக்கியமான காரியமாக ஃபோன் செய்தாலும் தகவல் தெரிவிக்கவோ பேசவோ அநுமதி மறுக்கப் பட்டி குந்தது. இன்னொரு காரியாலயத்தில் பத்திரிகை முதலாளி -எந்த உதவியாசிரியரைத் தம் அறைக்குக் கூப்பிட்டுப் பேசினாலும் அவரைவிட வயதானவர்களுக்கூட உட்கார லிட் கொடுக்காமல் நிறுத்தி வைத்துப் பேசுவதாகப் பலர் குறைப்பட்டுக் கொண்டு யூனியனில் தெரிவித்திருந்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/134&oldid=590506" இலிருந்து மீள்விக்கப்பட்டது