பக்கம்:நெற்றிக்கண்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 34 நெற்றிக் கண்

தன் கணவனை விட்டு அதைத் தெரிவிக்கச் செய்தாள். என்றாலும் எங்கே அவன் மறுத்துவிடுவானோ என்ற தவிப்பும் ஆவலும் அப்போது அவள் முகத்தில்தான் அதிக மாகத் தெரிந்தன. சில மாதங்களுக்கு முன்பு வரை சுகுண லும் அவளும் அதே நவநாகரிக ஒட்டலுக்கு எத்தனையோ ரூஃப்கார்ட்ன் டின்னர் சாப்பிடப்போய் வந்திருக்கிறார்கள். அந்த ஞாபகத்தைத் தவிர்க்க முடியாமல்தான் அவள் தன் கணவனை விட்டுத் தன்னைக் கூப்பிடச் சொல்லித் துாண்டி யிருக்க வேண்டுமென்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. -

நீங்கள் ஆபீஸிலிருப்பீர்களோ என்று ஆறு மணிக்கு நானும் இவரும் அங்கே போனோம். அங்கேயிருந்து நாலு மணிக்கே புறப்பட்டு விட்டதாக நாயுடு சொன்னார். அப்புறம் இங்கே வந்தோம். இங்கேயும் காணவில்லையே என்று வருத்தத்தோடு புறப்பட்டபோது கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல், நீங்களே வந்துவிட்டீர் கள்'-என்று அவன் மறுத்துச் சொல்லவோ தட்டிக் கழிக் கவோ அவகாசம் கொடுத்துவிட விரும்பாதவளைப் போல் விரைந்து கெஞ்சுவதுபோல் தொனிக்கும் குரலில் பேச்சைத் தொடங்கினாள் துளசி. -

இவராமே இவர்? பெண்களுக்குத்தான் எத்தனை விரைவாக.எத்தனை சுலபமாக உரிமையும் உறவும் கொண் டாட வந்து விடுகிறது?- என்று உள்ளுற நினைத்து நகைத்துக் கொண்டான் சுகுணன். அன்று அவன் டின்னருக். குப் போகிற மனநிலையிலில்லை. * * - -

இன்று நான் ரொம்பக் களைத்துப் போயிருக்கிறேன். என்னைத் தயவு செய்து விட்டுவிடுங்கள். இன்னொரு நாள் கட்டாயம் வருகிறேன்'-என்று துளசியின் கணவனிடம் நாகுக்காக மறுத்தபோது, "துளசிக்குத்தான் பெருத்த எமாற்றமாயிருக்கும் சார் அவள்தான் வருத்தப்படுவாள். என்ன இருந்தாலும் உங்கள் இரசிகைக்கு நீங்கள் இவ்வளவு பெரிய ஏமாறறத்தை அளிக்கக்கூடாது'-என்று நிர்விகார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/136&oldid=590508" இலிருந்து மீள்விக்கப்பட்டது