பக்கம்:நெற்றிக்கண்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1.37

ஆதியின் உள்ளத்தில் தான் தவிப்பாகவோ, ஏக்கமாகவோ இருந்து அந்த உள்ளத்தைத் தன்னையறியாமலே வதைத்துக் கொண்டிருக்கிறோமே-என்று உணரும்போது உள்ளுற எத்தனை வேதனையடைய முடியுமோ அத்தனை வேதனை. யையும்விட அதிகமான வேதனையோடுதான் அப்போது மாடிப்படியேறி அறைக்குப் போனான் சுகுணன்.

"ஆழமாக வேரூன்றி விடுகின்ற செடியைப்போல் நம்பிக்கை வாய்ந்த பெண்,ஆண் பிள்ளையின் மேல்வைத்து விடுகிற பிரியம்தான் எத்தனை நிலையாக ஊன்றிவிடு கிறது?-என்பதை நினைக்கும்போது அந்த அன்பை நிமிர்ந்து பார்த்து வியந்தது அவன் ம்னம். மனிதர்கள் தங்கள் உடலில் இரத்தம் சூடேறி ஓடுவதால் மட்டும் நிமிர்ந்து நடக்கவில்லை. உண்மையில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் எங்கோ கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிற அசல் அன்பினால்தான் நிமிர்ந்து நடக்கிறார்கள் போலிருக் கிறது என்று நினைக்கத் தோன்றியது.

"இன்னொருவர் மேல் மனப்பூர்வமாக அன்பு செய்வ தாலும் இன்னொருவரால் மனப்பூர்வமாக அன்பு செய்யப் படுவதாலும் தான் மனிதர்கள் நிமிர்ந்து நடக்க முடிகிறது" -என்று சிந்தித்தபோது அந்தச் சிந்தனை அழகாகவும் தம்பிக்கைக்கு உரியதாகவுமிருந்தது அவனுக்கு. நீராடி உடை மாற்றிக்கொண்டு அவன் மெஸ்ஸிற்குச் சாப்பிடப் புறப்பட்டபோது.அறை வாசலில் அவன் மாடிப்படி இறங்குவதற்கு இருந்த வேளையில் பைந்தமிழ் நாவலர் பா. பாண்டுரங்கனார் மூச்சு இரைக்க இரைக்கத் தம் கனத்த உடலைச் சுமக்க முடியாமல் சுமந்து படியேறி மேல்ே வந்து கொண்டிருந்தார். மாடிப்படியில் எதிரே நேருக்கு நேர் சந்திக்கும்படி ஆகிவிட்டதனால் சுகுணனால் பாண்டு ரங்கனாரிடமிருந்து தப்பி ஓட முடியவில்லை. தப்பித்து ஒட வழி இருந்தால் பாண்டுரங்கன்ாருக்கு முன் தலையைக் க்ாட்டாமல் நிச்சயமாகத் தப்பியிருப்பான் அவன். அந்த மனிதரிடம் யார் சிக்கிக் கொண்டாலும் - சிக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/139&oldid=590512" இலிருந்து மீள்விக்கப்பட்டது