பக்கம்:நெற்றிக்கண்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 நெற்றிக் கண்

கொண்டவருக்கு எத்தனை முக்கியமாக வேறு அவசரக் காரியம் இருந்தாலும் மூன்று-மூன்றரை மணி நேரம் போரடி'க்காமல் விடவேமாட்டார். சுகுணன் அவரறி யாமல் அவருக்கே போர்மாஸ்டர் ஜெனரல்’ (Bore Master General) என்று பெயர் சூட்டியிருந்தான். சென்னையில் ஏதோ ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து ஒய்வு பெற்றவரென்று அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்: தான் சுகுணன். கல்லூரியிலிருந்து அவர் ஒய்வு பெற்றாரா அல்லது அவரிடமிருந்து அந்தக் கல்லூரி ஓய்வு பெற்றதா என்பது சர்ச்சைக்குரிய பிரச்னையாகும். ஒய்வு பெற்ற பின்னர் தற்காலிகமாக அவர் செய்து கொண்டிருந்த காரியம் ஆகாசவாணியில் அருள் வாக்கு உரைப்பது. சுகமாகவும், கவலையற்றும் விடிகிற அதிகாலையின் இன்பத்தைக் கொடுப்பது போன்ற கட்டைக் குரலில் அருளும் இல்லாமல் வாக்கும் இல்லாமல் எதையாவது சொல்லி ரேடியோ கேட்பவர்களின் வயிற்றெரிச்சலை நாள் தவறாமல் கொட்டிக் கொண்டிருந்தார் இந்தப் பைந்தமிழ் நாவலர். இந்தக் குற்றத்தைச் செய்பவர் இன்னார் என்பதுபோல் அருள்வாக்கு உரை நிகழ்த்து பவர் என்று முன்னால் பெயர் சொல்வதோடு நிற்காமல் உரை முடிந்ததும் மக்கள் தங்கள் கோபத்தை யார்மேல் காட்டுவதென்ற தவிப்புடனிருக்கும்போது- இந்தக் குற்றத்தைச் செய்தவர் இன்னார் தான்' என்று சந்தேகத்துக் கிடம் வைக்காமல் பின்னாலும் பெயரைச் சொல்லிவிடு வார்கள். அருள்வாக்கு என்ற உபதேசத் தொழிலை அப்படியே குத்தகைக்கு எடுத்தவர் போல் தினந்தோறும். பாண்டுரங்கனாரே அதைச் செய்து கொண்டிருந்ததைக் கண்டு அவரைப் போலவே ஒய்வு பெற்ற வித்துவான்களும், உபதேசம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்களும், ரேடியோக்காரர்களிடம் 'அருள் வாக்கு ஒருவருக்கே சொந்தமானதா? என்று சண்டைக்குப்போகவே அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். முதல் நாள் அருள்வாக்கின் போது பா. பாண்டுரங்கனார் என்று தமிழில் முதலெழுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/140&oldid=590513" இலிருந்து மீள்விக்கப்பட்டது