பக்கம்:நெற்றிக்கண்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1. 3 &

தைச் சொல்லிப் பெயரை அறிவித்தால் மறுநாள் அருள் வாக்கின் போது பி. பாண்டுரங்கனார் என்று வேறு பெயர்

போலத் தோன்றும்படி ஆங்கிலத்தில் முதலெழுத்தைச்

சொல்லி அறிவித்தார்கள். இத்தனைக்கும் மேலாகத்

திரு. பாண்டுரங்கனாருக்குப் பூம்பொழிலைப் போலத்

தரமான இலக்கியப் பத்திரிகை ஒன்றில் தொடர்ந்து கந்த

புராணத்தைப் பற்றியோ பிரபுவிங்க லீலையைப் பற்றியோ ஓர் அறுபது வாரத்துக்கு எழுதித் தள்ளிவிட வேண்டு

மென்பது ஆசை. அதற்காகவே சுகுணனைச் சுற்றிச் சுற்றி

வந்து கொண்டிருந்தார் அவர். பாண்டுரங்கனாருக்குத்

தமிழையும் இலக்கியத்தையும்விட அதிகமாகத் தெரிந்த

கலை, இன்னொருவரைப் பச்சையாகப் புகழ்வது. முகல்

துதியில் மன்னன். இவற்றிற்கு அநுசரணையானதும் எந்தக் கொம்பனையும் உடனே வசப்படுத்தக் கூடியதுமான

உபதொழில் கைரேகை பார்ப்பது, வேதாந்திகள் சில

இடங்களில் மாயை’ தான் கவர்ச்சி மிகுந்தது என்கிறார்

களே, அதுபோல் பாண்டுரங்கனாரைப் போன்ற மனிதர்கள்

தான் சென்னைப் பட்டினத்து மாயைகள். இந்த மாயை களின் கவர்ச்சியோ, செல்வாக்கோ, புகழோ பட்டினத்தில் ஒரு நாளும் குறையாதென்பதை உறுதியாக நம்பலாம். என்று தோன்றியது சுகுண்னுக்கு. சமீபத்தில் சிறிது

காலமாக நாகசாமியின் கை பாண்டுரங்கனாரிடமிருந்தது.

அதாவது பாண்டுரங்கனார் அடிக்கடி நாகசாமியைத் தேடிச் சென்று அவருக்குக் கைரேகை பார்க்கத் தொடங்கி

யிருந்தார். - - -

ஊரில் எத்துனையோ போலிகள் கைரேகை பார்ப்பு. தாகப் பாமர மக்களை ஏமாற்றித் திரிகின்றன. யாம் அவ்வாறு செய்வதில்லை. செருமானிய நாட்டு (ஜெர்மனி என்பதற்குப் பாண்டுரங்கனாரின் தமிழாக்கம்) அறிஞ. ரொருவர் எழுதியுள்ள சிறந்த இரேகை நூலினைக்கொண்டு யாம்றிந்த உண்மைகளைச் சொல்வி வருகின்றோம்'என்று தனித்தமிழில்-தம்முடைய தொழில் திறமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/141&oldid=590514" இலிருந்து மீள்விக்கப்பட்டது