பக்கம்:நெற்றிக்கண்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、夏强母 நெற்றிக் கண்

எடுத்துச் சொல்லுவது அவர் வழக்கம். பாண்டுரங்காைரிடம் சில அபாரமான திறமைகளும், சாமர்த்தியங்களும் உண்டு. நாகசாமியைப்போல் தொழிலதிபர்கள், பெரிய மனிதர்கள் யாரையாவது பார்த்தால், "இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நம் முதலமைச்சரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந் தேன். அப்போது தங்களைப் பற்றியும் ஏதோ பேச்சு வந்தது. அவர் அந்தப் பேச்சை மிகவும் விருப்பத்தோடு கேட்டதுமில்லாமல் தங்களைப்பற்றி என்னிடம் அன்போடு விசாரித்தார். நானும் தங்களைப் பற்றி அவரிடம் நிறையச் சொல்லியிருக்கிறேன்'- என்று நடுவாக நாலு வார்த் தைகள் சொல்வி வைப்பார். பெரிய மனிதர்கள், பெரிய மனிதர்களைப் போன்றவர்கள், பிரமுகர்கள், பிரமுகர் களைப் போன்றவர்கள்.- புகழுக்கு ஏங்குகிறவர்கள், பணத்துக்கு ஏங்குகிறவர்கள்-எல்லாருடைய பலவீனமும் அவருக்கு நிறையத் தெரிந்திருந்தது. முதலமைச்சர் தன்னைப்பற்றிப் பாண்டுரங்கனாரிடம் எதற்காக விசாரிக்க நேர்ந்தது?- பாண்டுரங்கனார் தன்னைப்பற்றி அவரிடம் நிறைய எடுத்துக் கூறுவதற்கு என்ன இருக்கிறது:என்பதையெல்லாம் யோசிக்கவே யாருக்கும் அவகாச மிராது. , - &

ஆகா: இந்தப் பாண்டுரங்கனாருக்குத்தான் எத்தனை பெருந்தன்மை: தான் முதலமைச்சரைப் பார்க்கச் சன்ற போதுகூட நம்மை நினைவு வைத்திருந்து மறந்துவிடாமல் அவரிடம் நம்மைப்பற்றி நிறையப் பேசியிருக்கிறார்-என்று. பாண்டுரங்கனாரிடம் எல்லையற்ற விசுவாசம் பெருகும்படி யாக அவர் நடந்து கொள்வார். இவ்வளவு சாமர்த்திய மிருந்தும் சுகுணனை மட்டும் அவரால் ஏமாற்ற முடிய வில்லை. அவன் அவரை உள்ளும் புறமும் அளந்து வைத் இருந்தான். அவரையும் அவரைப் போன்றவர்களையும் பார்த்து எந்த விதமான கவர்ச்சியும் ஏற்படாததோடுமேலே பட்டுவிட்டால் அரிக்கக்கூடிய ஒரு கம்பளிப் பூச்சி யைப் பார்ப்பதுபோல் பல சமயங்களில் அருவருப்பு மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/142&oldid=590515" இலிருந்து மீள்விக்கப்பட்டது