பக்கம்:நெற்றிக்கண்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நெற்றிக் கண்

பெரியோய் புகழ்க்கெல்லா முரியோய் பெருமைமிகு பி எஸ். கே. ஃபிளவர்முல்லின் திருவார்ந்த செயலதிப் பொருட்செல்வா கீ சீராரும் மணிவிழாக்கள் பலவுறுகவே!

-என்று தகுதியும் காரணமும் நோக்காமல் குருட்டு விசுவா சத்தோடு பாடப்பட்டிருந்த அந்தக் கவிதையை அருவருப் போடு மேஜைமேல் வைத்துவிட்டு அதைப் பாடிய பாவத் துக்குச் சொந்தக்காரரான பாண்டுரங்கனாரை நிமிர்ந்து பார்த்தான் சுகுணன். அப்போது அவனது வெறுப்பையும். அருவருப்பையும் சிறிது கூடப் புரிந்து கொள்ளாதவராய், 'இந்தப் பாடலில் ஒரு சிலேடையையும் இருபொருள் அலங்காரமாக வைத்திருக்கிறேன். மாவு 6 3|} 5 தருகின்றாய்'- அதாவது, மூன்றாம் அடியில்- சரியான மாவு வகை தருகின்றாய்-என்கிற இடத்தில் மாவு-வகை என்றும் ஒரு பொருள். மா-பெரிய, உவகை-மகிழ்ச்சி, பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறாய் (மா உவகை தருகின்றாய்) என்றும் ஒரு பொருள். சிலேடை எத்தனை நயமாக வந்து விழுந்திருக்கிறது. பார்த்தீர்களா சுகுணன்?' -என்று விளக்க உரை வேறு கூறத் தொடங்கிவிட்டார். பாண்டுரங்கனார். சுகுணனுடைய மனத்திலோ அந்தச் செய்யுளையும் பாண்டுரங்கனாரையும் அருவருப்பாக, நோக்கும்போதே அதன் மறுபுறமாக உள்ளே ஒரு துணிவும்: நக்கீர தைரியமும்கூடப் பெருகின. W . . . . . . . .

"ஐயா! இந்த மாதிரித் தனி மனிதர்களைத் தேவைக் கதிகமாகப் புகழும் புகழ்ச்சியைச் செய்யுளாக வேறு எழுத வேண்டிய அவசியமென்ன? பத்திரிகையில் இதைப் பிரசுரிப்பதனால் இந்தப்பாடலில் புகழப்படுகிற மாவரைப் பவரும் அவருக்கு வேண்டியவர்களும் திருப்திப்படலாம். இலக்கிய ரசனைக்காகப் பத்திரிகை வாங்குகிறவர்களுக்கு. இதனால் பத்திரிகையின்மேல் அவநம்பிக்கையும், ஏமாற்றமும் அல்லவா ஏற்படும்?- என்று சுகுணன் அவரை. வினாவியபோது, அவர் அசடுவழியச் சிரித்தபடி, "ஹி ஹி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/144&oldid=590518" இலிருந்து மீள்விக்கப்பட்டது