பக்கம்:நெற்றிக்கண்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 罩45

'அதுவா? விழா நிகழும் நாளில் தாககாமி அவர் களுக்குப் பொது மக்கள் சார்பில் நாங்கள் ஒரு சிறப்புப் பட்டமளிக்கப் போகிறோம். அப்பட்டமே பல்பத்திரிகைக் காவலர்-என்பது' w . - - -

'சொல்வதற்கு என்னவோ போலிருக்கிறதே! 'கல் வைத்த மூக்குத்தி--என்பது போல் நீங்கள் அவசரமாகச் சொல்வியபோது என் காதில் இது விழுந்தது. அதனால் தான் இரண்டாம் தடவையாகக் கேட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்’’-என்று சொல்லிப் பிரிவதற்கு அடையாள மாகக் கையையும் கூப்பிவிட்டுச் சுகுணன் அவரிடமிருந்து விடைபெற்று மெஸ்ஸஅக்குச் செல்ல முயன்றபோதும் அவர் அவனை அவ்வளவு சுலபமாக விடவில்லை.

' சொற்பொழிவுக்கு என்ன சொல்லுகிறீர்கள்? நிகழ்ச்சி நிரலில் உங்கள் பெயரையும் சேர்த்து அச்சிட்டு விடுகிறேனே.......' - - - -

"சொற்பொழிவைப் பற்றி என்ன? நாங்களெல்லாம் நாகசாமியின் நிறுவனத்திலேயே இருப்பவர்கள். நாங்களே நான் முந்தி நீ முந்தி என்று அவரைப் புகழ்வது நன்றா யிராது. புகழ்கிற காரியத்தை அருகிலேயே இருந்து பார்த்து விட்டவர்களிடம் ஒப்படைப்பதை விட்டப் பார்க்காத புதியவர்களிடம் ஒப்படைப்பதுதான் பத்திர மானது...'-என்று சொல்லிக் கொஞ்சம் விஷமத்தனமான புன்முறுவலுடனேயே அந்த வேண்டுகோளை அவரிடம்

மறுத்தான் சுகுணன். . . . . . .

- இல்லை! இல்லை! அவசியம் நீங்கள் உரையாற்ற வேண்டும்'-என்று மன்றாடினார் பைந்தமிழ் நாவலர். - "என்னவோ நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்" என்று தாசூக்காக அவரிடமிருந்து அவர் விடை கொடுப்பதற்கு முன்பே வலியக்கத்தரித்துக் கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து விட்டான் சுகுணன். - . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/147&oldid=590521" இலிருந்து மீள்விக்கப்பட்டது