பக்கம்:நெற்றிக்கண்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நெற்றிக் கண்

மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு சொற்பொழிவாற்ற இணங்கிடவும் முடியாமல், கண்டிப்பாக முடியாது என்று சொல்லி மறுக்கவும் முடியாமல் அவன் தயங்கும்படியான வேண்டுகோளை அவனிடம் விடுத்திருந்தார் பாண்டு ரங்கனார். ' என்னால் பேசமுடியாது, மாட்டேன்' என்று நேரடியாக மறுத்து விட்டால், உங்கள் விழாவில் நாலு வார்த்தை பேசச் கொன்னேன். மறுத்துவிட்டார்-என்று நாகசாமியிடமே போய்த் தீ மூட்டுவார் பாண்டுரங்கனார், பேசுவதற்கோ அவனுக்கு விருப்பமில்லை. நிறுப்பதற்கு ஒரு சாதனையுமில்லாமல் மற்றவர்களின் சாதனைகளைத்' தன் பெயரில் பணம் கொடுத்து வரவழைத்துக் கொண்டு அதற்காக வெட்கப்படாமல் நிமிர்ந்து நடக்கிறவர்களைச் சுயநலத்துக்காகச் சிலர் பாராட்டுவதும் பட்டம் கொடுப் பதும் போலியான காரியமென்று அவற்றை வெறுத்தான் அவன். நாகசாமிக்காக நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவிற்கான சகல செலவுகளையும் பாண்டுரங்கனார் நன் கொடை என்ற பெயரில் நாகசாமியிடமே வசூல் செய்திருப் பார் என்பதும் இரகசியமாக அவனுக்குத் தெரியும். இப்படி நிகழ்ச்சிகளையும், இப்படி மனிதர்களையும் சந்திக்கும் போது அல்லது கேள்விப்படும்போது சமூகம் எந்த மூலை. யிலோ அழுகியிருக்கிறது என்ற அதே எண்ணம்தான் அவனுள் உறுதிப்பட்டது. இந்தப் போலிகளை எதிர்த்து உரத்த சப்தமிட்டுப் பட்டினம் முழுவதும் கேட்கும்படிபெரிய அபாயச் சங்கு போன்ற குரலில் உண்மையைப் பெரி தாய் முழங்கிக் கூற வேண்டுமென்று அவனுள் ஒரு தைரியம் குமுறியது. அதே சமயம் அந்தத் தைரியத்துக்கு எதிராக எங்கெங்கிருந்து நெற்றிக்கண்கள் திறக்குமென்று சிந்தித்த போது தயக்கமாகவும் இருந்தது.

மறுநாள் காலை அவன் அலுவலகத்துக்குள் நுழைந்து அறையில் போய் அமர்ந்ததுமே ரங்கபாஷ்யம் மானம், வெட்கம் எல்லாவற்றையுமே அறவே துடைத்தெறிந்து விட்டது போன்ற ஒரு வியாபாரப் புன்முறுவலோடு, லெப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/148&oldid=590522" இலிருந்து மீள்விக்கப்பட்டது