பக்கம்:நெற்றிக்கண்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 147

அஸ் ஃபர்கெட்தி பாஸ்ட்...நான் ஏதாவது தப்பாகப் பேசி ஆயிருந்தால் மன்னிச்சுடுங்கோ...நீங்களும் பத்திரிகையின் தன்மைக்காகத்தான் பாடுபடறேள். நானும் அதுக்காகத் தான் சிரமப்படறேன். நமக்குள்ளே சண்டை கூடாது" என்று வந்து குழைந்தார். அவருடைய இந்தக் குழைவுக்கு அர்த்தமே இல்லை என்பது சுகுனனுக்கு நன்றாகத் தெரி .யும். எதிரியின் மனத்தில் பகையை அறவே அமுக்கிவிட்டு எதிரி முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ அற்றிருக்கம் போது அவன் மேல் முழுப்பகையோடும் வைரத்தோடும் பாய்வது போன்ற அந்தரங்கக் குரோதத்தில் ரங்கபாஷ்யம் கெட்டிக்காரர். யாரிடமும் வெளிப்படையாக அனபாபுல ராகிக் கெட்ட பெயரெடுக்கக்கூடாது என்று நினைக்கிற விளம்பர மனம் அவருடையது. -

"எப்படி இதில் நினைப்பதற்கு ஒன்றுயில்லையோ அப்படியே மறப்பதற்கும் ஒன்றுமில்லை...உங்கள் காசி யத்தை நீங்கள் செய்கிறீர்கள், என் கடமையை நான் செய் கிறேன்' என்று சுருக்கமாக அவருக்குப் பதில் சொல்லி அனுப்பினான் சுகுனன். - -

ஒருவனை நேரடியாக எதிர்க்கவோ, பகைத்துக் கொள். ளவோ கூடத் திராணியில்லாத கோழைத்தனமான கெட்ட வர்கள் தான் பட்டணத்தில் நிறைய இருக்கிறார்கள் என்று தோன்றியது. நண்பனைப் போலவும், வேண்டியவனைப் போலவும் பழக வசதி செய்து கொண்டு-அந்த வசதியின் மறைவில் உள்ளேயே இரகசியமாகப் பகையை வளர்த்துத் திடீரென்று ஆளை வீழ்த்தும் சில கொடிய நோய்களைப் போல் உருவாகும் நாகரிக எதிரிகளே எங்குமிருப்பதாகத் தோன்றியது. சுகுணனுக்கு. ரங்கபாஷ்யத்தின் விரோதத்தை அவன் எப்படி பொருட்படுத்தி மதிக்கவில்லையோ அப்ப டியே சமரசத்தையும் பொருட்படுத்தி மதிக்கவில்லை. சங்க பாஷ்யம் எவ்வளவு கெட்டிக்காரர் என்பது அவர் வந்து விட்டுப் போன பத்து நிமிஷங்களுக்குள்ளேயே தெரிந்தது. முதல் நாள் நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாமல், ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/149&oldid=590523" இலிருந்து மீள்விக்கப்பட்டது