பக்கம்:நெற்றிக்கண்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 3

ஆயிற்று. பொழுது நன்றாக விடிந்துவிட்டது. வெயிலில் பசிய வயல்வெளிகள் மனோரம்மியமான மரகதப் யாளங்களாக மின்னத் தொடங்கிவிட்டன. இன்று முகூர்த்த நாளல்லவா? ஊரிலிருந்து தள்ளியிருந்த அந்த டிராவலர்ஸ் பங்களாவிலும் வந்து கேட்கிறாற் போல எங்கோ கிராமத்துக் கல்யாண வீட்டில் நாதஸ்வரம் இனிமையாய்ப் பொங்குகிறது. பூக்களின் வாசனையிலும் சங்கீதத்தின் ஒலியிலும் மனிதனுடைய பழைய-புதிய ஞாபகங்களை இயக்கும் ஏதோ ஒர் ஆந்தரிக சக்தி உண்டு போலிருக்கிறது. இதே நேரத்திலோ, அல்லது இதற்குச் சிறிது முன்னா லேயோ துளசியின் பொன்நிறக் கழுத்திலும் யாரோ ஒர் அந்நியன் நாதஸ்வர ஒலியினால் கிளுகிளுக்கும் உற்சாக .மான மனத் துள்ளலோடு தாலி கட்டியிருப்பான்'- என்று எண்ணியபோது துக்கமோ, ஏமாற்றமோ, அல்லது இரண்டுமே சேர்ந்தோ ஒர் உரமான உணர்ச்சி சுகுணனின் நெஞ்சைக் கவ்வி அடைத்தது. - -

படிப்பு, நெஞ்சுரம், எத்தகைய எதிர்ப்பைச் சுமந்து வருகிற அபிப்ராயங்களையும் தன் முன் வந்ததும், பார்வை ஆபாலோ, தோற்றத்தாலோ, சொல்லாவோ, அப்படியே கூசி நிற்கச் செய்து விடுகிற சக்தி-இவையெல்லாமின்றி வெறும் சிறு குழந்தையாயிருந்தால் நெஞ்சை வந்து அடைக்கும் அந்த உணர்வைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவன் அப்போதே கோவென்று கதறி அழுதிருப்பான். ஏதோ ஒர் அவசரமான ஆசையில் பிறக்கிற மனிதர்களின் காதல் சத்தி யங்கள் வேறு ஏதோ ஒர் அவசரத்தில் அல்லது அவசியத்தில் எத்தனை விரைவாகப் பொய்யாய் விடுகின்றன' - என் றெண்ணிப் புழுங்கியது அவன் உள்ளம், பாலைவனத்து த் தாகத்தைப்போல் தாகமும் தவிப்புமே மாற்றிலாத உணர்வு .களாய் எதிரே சாதனம் எதுவும் தென்படாத தனி ஏமாற்றமே அவன் நெஞ்சில் அப்போது நிரம் பியிருந்தது. அவன் மனக் கண்களில் அந்தக் கடன்காரி துளசி நின்றாள். உணர்வின் சத்தியத்துக்கு வட்டிதராமல் ஏமாற்றுகிறவர் களும் கட்ன்காரிகள்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/15&oldid=590381" இலிருந்து மீள்விக்கப்பட்டது