பக்கம்:நெற்றிக்கண்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 5.1

தான் ஒன்பதாவதுபடி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில்கூட ஏற முடியாத குடும்பங்கள் அப்படியே தானிருக்க முடிகிறது. ஏற்கெனவே எட்டுப்படி ஏறிவிட்ட செளகரியமுள்ள குடும்பங்களின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் கழிசடைகளாகவே இருந்தாலும்-மெடிகல் காலேஜ் அட்மிஷன், என்ஜீனியரிங் காலேஜ் அட்மிஷன், பெரிய உத்தியோகம், வெளிநாட்டுப் பிரயாணவசதி, எல்லாமே எட்டாவது படியில் நிற்பவனுக்கு ஒன்பதாவது படிப்போல் மிக அருகிலேயே இருக்கின்றன. ஆனால் முதல் படிக்கும் கீழே இருக்கும் சமையற்காரச் சர்மாவின் பிள்ளை சுந்து, தோட்டி முனுசாமியின் மகன் குப்பு, அப்பளமிடும் அம்மாளுவின் பெண் அலமு, போன்றவர்கள் இரண்டாவது படியில்கூடச் சரியாக ஏற முடிவதில்லை. இந்திய சமூக வாழ்வில் சோஷலிசம் என்கிற சமதர்ம மலர்ச்சிகூட எட்டுப் படி ஏறியவர்களுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய முதல் படியிலிருந்து ஏங்குகிறவர்களுக்கு மேலே ஏற வசதியின்றி இருப்பதை எண்ணிச் சுகுணன் அடிக்கடி மனத்தில் வெதும்பியிருக்கிறான். இந்தச் சமதர்ம மலர்ச்சி வியாபக மாகவும், நன்றாகவும் பூரணமாகவும் ஏற்படுவதற்கு என்ன வழி செய்ய முடியும் என்ன வழி செய்ய வேண்டும் என்பது அவன் சிந்தனையில் ஒரு தாகமாகவே இருக்கிற நிலையைப் பெற்றிருந்தது. தந்தையின் பணம் துளசியின் கணவனை * என்ஜீனியரிங் படிப்புப் படிக்க வைக்கிற அளவு வசதி செய்தது. பின்பு மாமனாராகிய துளசியினுடைய தந்தை தம் செல்வாக்கினால் இரண்டாயிர ரூபாய்க்குமேல் மாத வருமானம் வருகிறாற்போல் உத்தியோகம் தேடிக் கொடுத்துவிட்டார். இப்படி இரண்டு செல்வாக்குகளுக்கு நடுவே இருக்கிற பிள்ளைகள்தான் சராசரி இந்திய சமூக வாழ்வில் செளகரியத்தை அடைய முடிகிறதென்று தோன்றியது. சுகுணனுக்கு இருந்த காரியாலய வேதனை களிலும் கசப்பான அநுபவங்களிலும் துளசியின் கணவனுக்கு உத்தியோகம் கிடைத்து விட்டதென்ற இந்தச் செய்தி கூடத் தெரிந்திருக்க நியாய்மில்லை. துளசியே ஒருநாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/153&oldid=590528" இலிருந்து மீள்விக்கப்பட்டது