பக்கம்:நெற்றிக்கண்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 153

சொல்ல முடியாமல்...சொல்லத் தோன்றாமல்-இப்படி நீங்கள் மேலும் ஒரு வார்த்தை பேசினால்கூட இனி என் னால் தாங்க முடியாது. நான் அழுதுவிடுவேன்' என்பது போல் ஏக்கத்தோடு அவனைப் பார்த்தாள் துளசி. அவனும் அமைதியாக அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். இடையில் நிலவிய மெளனமே அப்போது இருவர் உணர்வு களையும் பேசியது. r, -

'அவர்தான் முதலில் போகிறார். நான் இரண்டு வாரம் கழித்துப் போக வேண்டியிருக்கும். டெல்லியில் குடி விருக்க இடமெல்லாம் கிடைத்து அவரிடமிருந்து தந்தி வந்ததும் அப்பா என்னைக் கொண்டு போய்விட ஏற்பாடாகியிருக்கிறது...'

"பரவாயில்லை இதற்காக எல்லாம் இனி நான் கவலைப்பட முடியாது துளசி. இது உன் வாழ்க்கையின்

சொந்தக் காரியம்.' -

'இன்னும் எனக்கு வாழ்க்கையே ஏற்படவில்லை. அதற்குக் காரியங்களும் சொந்தமாக இல்லை. நான் நினைத்த வாழ்வு என் மனத்திலே கருகிவிட்டது.'

"இருக்கலாம்! ஆனால் இனிமேல் உலகத்துக்கு எடுத்துச் சொல்ல முடியாத ஊமை ஏமாற்றம் இது. இதை ஆநீ மறந்துவிடப் பழகிக் கொள்வது நல்லது...' -

'ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லமாட்டீர் களா? இப்படிக் கடுமைக்கும் உதாசீனத்துக்கும் நான் பாத்திரமில்லை. இவற்றை என்னால் தாங்கிக் கொள்ள :முடியாது...!" - -

அவன் பதில் பேசாமல் இருந்தான். c 'தயவு செய்து ஏதாவது ஆறுதலாகச் சொல்லி எனக்கு விடைகொடுங்கள்'

மேஜைமேல் கிடந்த அரைக் காகிதம் ஒன்றை எடுத்து அதில் எதையோ எழுதி மெளனமாக அவளிடம் நீட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/155&oldid=590530" இலிருந்து மீள்விக்கப்பட்டது