பக்கம்:நெற்றிக்கண்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏莎4 நெற்றிக் கண்

வீரர்களின் கம்பீரமான தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்ப வசத்தால் கோழை. களின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு' என்று அதில் எழுதியிருப்பதைப் படித்து விட்டு நீர் திரை யிட்டு மல்கி மறைக்கும் விழிகளால் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள் அவள்.

'இதுதான் மீண்டும் உங்கள் பதிலா!'

அவன் ஆமாம் என்பதுபோல் மெளனமாகத் தலையை அசைத்தான். அவள் நடைப்பிணமாக வெளியேறினாள் - சில கணங்களில் வாயிலில் கார் புறப்படும் ஓசை கேட்டது. அவன் எழுந்து ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கண்ணாடி யைக் கழற்றிவிட்டு உள்ளே விழிக்கடையில் அரும்பியிருந்த 'கண்ணிரைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தோன்றி மாடி வராந்தா வரை வந்து அவன் தெருவருகே பார்த்த, போது அவளுடைய கார் கண்பார்வைக்குத் தென்படாமல் மறைந்திருந்தது. பெருமூச்சுவிட்டபடி அறைக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தான் சுகுணன். இதற்குப் பின் சிலமணி நேரங்கள் அவனுக்கு ஒரு வேலையும் ஒடவில்லை. துளசிக்கு, அவளுடைய வாழ்வின் பொறுப்பையும் நிலையையும் உணர்த்தவே அவன் அப்படிக் கடுமையாக நடந்து கொண் டான். அவளைப் போலவே அவனும் உருகி ஏங்கிப் பேசிக். கொண்டிருந்தால் இருவருவடைய பேச்சுக்கும் ஒரு முடிவே இராது. அப்படிப் பேசினால் அதன் பின் அவளாலும் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் டெல்லியில் போய் நிம்மதி யாக இருக்க முடியாது. உணர்ச்சி மயமாகவும். பிரித் தெடுக்க முடியாதபடியும் தன்மேல் பிரியம் வைத்து விட்ட அவளுக்கு அவளுடைய புதிய நிலைமையை உணர்த்த, வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது. அவள் தன்னைச் சுற்றி சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு: அவள் மீதிருந்த அதிக அன்பின் காரணமாகவே அவனுக்கு. வந்திருந்தது இப்போது. அந்தக் கடமையை அவன் செய்தான். அவள் அதைப் புரிந்து கொள்ள முடியாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/156&oldid=590531" இலிருந்து மீள்விக்கப்பட்டது