பக்கம்:நெற்றிக்கண்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 57

பிறந்த நாள் எந்த மாதம் எந்தத் தேதியில் எந்த நட்சத் திரத்தில் வருகிறதென்று சுகுணனுக்கோ டைம்ஸ் நாயருக்கோ தெரியாது, ஆனால் சர்மாவுக்கு இம்மாதிரி விஷயங்களில் அதிகமான கவனம் உண்டு.

நாகசாமியின் பிறந்த நாள் என்றைக்கோ அன்றைக்கு அதிகாலையிலேயே ரோஜாப்பூ மாலையும் கையுமாக சாந்தோமில் அவருடைய பங்களா வாசலில் போய் நிற்பார். இப்படிக் காரியங்களால் நாகசாமியைச் சரியாகக் குளிப்பாட்டி வைத்திருப்பவர் அவர், சுகுணனோ இது போன்ற செயல்களை அசிங்கமாகக் கருதுபவன். "பாரதியார் பிறந்ததினத்தைப் போலவோ, விவேகானந்தர் காந்தியடிகள் பிறந்ததினங்களைப் போலவோ நாக சாமியை போன்ற சோம்பேறிப் பணக்காரர்களின் பிறந்த தினத்தையும் கொண்டாடுவது அசிங்கம் என்பது அவன் கருத்து. பிறந்த தினத்தைக் கொண்டாடும் படியாக இந்தச் சுயநலவாதிகள் தேசத்துக்கு எதுவும் செய்வதில்லை என்று நினைப்பவன் அவன். இவர்கள் சுயநலத்துக்காகப் பணம் சேர்ப்பதும் செல்வாக்குச் சேர்ப்பதும் சந்ததி களுக்குச் சொத்து மீதப்படுத்தி வைத்து விட்டுப் போவதும் தவிர இவர்கள் தேசத்துக்குச் செய்யும் தொண்டு ஒன்றுமில்லை என்றெண்ணி இவர்களை வெறுத் தான் அவன். பத்திரிகைத் தொழிலைப் பற்றி ஃபோர்த் எஸ்டேட்' என்றும் பேனா வீரனின் சத்திய யுத்தம்" என்னும் இலட்சியவாதிகளின் புத்தகங்களில் வாசித்தும் சொற்பொழிவுகளில் கேட்டும் இளமையிலேயே அதில் தாட்டம் கொண்டவன் அவன். அந்தத் தொழிலில் துழைந்து பார்த்த பின்பு இப்போதோ தன்னம்பிக்கை இல்லாதவர்களும், இ ச்ச க ம் பேசுகிறவர்களும், இலக்கிய உணர்ச்சியே அற்றுப் போனவர்களும் அறிவின் மையினால் புத்தியிலே பேடிமைப் பட்டுப் போனவர் களுமாக சர்மாவைப் போல். பலர் அதில் நிறைந் திருப்பதைப் பார்த்து நொந்தது போயிருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/159&oldid=590534" இலிருந்து மீள்விக்கப்பட்டது