பக்கம்:நெற்றிக்கண்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நெற்றிக் கண்

துளசியின் திருமணத்தன்று அவன் தென்படவில்லை; என்பதும் அதற்கும் மேலாக அவன் அன்று ஊரிலேயே இல்லை என்பதும் அந்தத் திருமணத்திற்கு அவன் வரவே. இல்லை என்பதும். இதற்குள் எத்தனை பேருடைய வாய் களில் எத்தனை விதமான வம்புகளாய்ப் புகுந்து புறப் பட்டிருக்குமென்று தனக்குத்தானே கற்பனை செய்ய முயன்றான் அவன், உணர்ச்சி நஷ்டம் தன்னுடையதா யிருக்கும் போது எவ்வளவு சாதுரியமான டிப்ளமேட் ஆக இருந்தாலும் சும்மா இருந்து விட முடியாதென்று அவனுக்கு, தோன்றியது. யாருக்கு எந்த அளவு டிப்ளமஸி' தேவையோ தேவையில்லையோ, ஒரு பத்திரிகையாளனுக்கு அது அதிக அளவு அவசியம் தேவை. தனக்கு ஒன்றும் நஷ்ட மில்லாதது போல், தான் ஒன்றுமே பாதிக்கப்படாதது போல் எல்லாரையும் போல், அவனும் அந்தக் கலியானத். துக்குப் போய் எல்லோரோடும் சேர்ந்து எல்லார் மேலும் தெளிக்கப்படுகிற பன்னீரில் தானும் நனைந்து, எல்லாரும் கைநனைக்கிற சந்தனக் கும்பாவில் தானும் கைநனைத்து, எல்லாரும் எடுத்துக் கொள்வதுபோல பூச்செண்டும் கல்கண்டும்-பட்டும் படாமலும் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு-விருந்து உண்டு தாம்பூலப் பையோடு. திரும்பி வந்திருக்கலாம்தான். ஏனோ தெரியவில்லை. அப்படிச் செய்ய நினைப்பதைக்கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இயல: வில்லை. - - - -

- உலகத்தை ஏமாற்றுவதைவிடக் கேவலமான காரியம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுதான். அதைச் செய் வதற்கு அவனால் முடியாமற் போய்விட்டது. மற்றவர்கள் ஏமாற்றும்போது தெரு விளக்கை அணைப்பதுபோல் உலகத்தின் பொதுவான சத்தியத்தைத் தான் ஒளிகுன்றச் செய்கிறோம். தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் போதோ சொந்த மனத்தையே இருண்டு போகச் செய்து கொள்கிறோம். ஓர் இணையற்ற கலைஞன் என்ற முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/16&oldid=590382" இலிருந்து மீள்விக்கப்பட்டது