பக்கம்:நெற்றிக்கண்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

汉58 நெற்றிக் கண்

'திலகரும், பாரதியாரும், சத்திய வேட்கையோடு பத்திரிகை நடத்திய தேசமா இது?’ என்று அவனுக்கே. சந்தேகமாயிருந்தது. எனினும் இந்தச் சூழ்நிலையைப் பார்த்து அவனுடைய நக்கீர தைரியம் பெருகியதே ஒழியச் சிறிதும் குறையவில்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு முக்கிய மான தேவை நிறையச் சம்பளமோ, போக வரக் காரோ, டெவிபோன், பங்களா வசதிகளோ அல்ல; தன்னம் பிக்கைக்கு அழிவு வரும் போது இவற்றையெல்லாமே துச்சமாக மதித்துத் தொண்டு நிலைமையைத் 'து' என்று தள்ளி விட்டுக் கொள்கையோடும் சத்தியத்தோடும் நிமிர்ந்து விலகி நிற்கிற தைரியம் தான் வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்ந்திருந்தான் அவன். சந்தையில் மீன் கடை வைத்திருப்பவர்களுள் இருப்பதைப் போன்ற கீழ்த்தரபான பெருந்தன்மையில்லாத போட்டி மனப்பான்மை இந்தப் பத்திரிகைக்காரர்களுக்கிடையேயும் இருப்பதைக் கண்டு அவன் வெறுத்தான். புத்தியுள்ளவர் கள் ஒரு காரியத்தை முன்வைத்துப் போட்டியிடுவதில் கூடப் புத்தியின் பெருந்தன்மை இருக்க வேண்டும். அந்தப் பெருந்தன்மை இங்கே இல்லையே என்று உள்ளூர வருந்தி னான் அவன். -

துளசியும் டெல்லிக்குப் போய்விட்ட பிற்கு அவன் தன் பாசத்தையோ, அன்பையோ, கருணையையோ செலுத்துவதற்குத் தகுதியான மனிதர்கள் யாருமில்லை. துளசியிடம் குத்தலாகவோ ஆத்திரமாகவோ பேசினால் கூட அந்தப் பேச்சின் மறுபுறமாக அவன் மனத்தில் கருணை யும் பிரியமும் நிரம்பியிருக்கும். இப்போதோ காரியாலய அநுபவங்களும், ரங்கபாஷ்யம் மறைமுகமாக அவனுக்குச் ச்ெய்த கெடுதல்களும் அவனை மிகவும் கடுமையாகவும் காலூன்றி நின்று தீமையை எதிர்த்துப் போரிடும் சக்தியைப்பெற்ற கொள்கை மறவனாகவும் ஆக்கியிருந்தன. யார் எத்தனை உயரத்திலிருந்து நெற்றிக் கண்ணைத் திறந் தாலும் குற்றம் குற்றமே என்று அழுத்திச் சொல்லும்அடித்துச் சொல்லும் நெஞ்சுரத்தையும், சொல்லுரத்தை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/160&oldid=590535" இலிருந்து மீள்விக்கப்பட்டது