பக்கம்:நெற்றிக்கண்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசார தி v; 15 9

யும், கொள்கை மறங்களாக போற்றினான். அவன். இந்த மாறுதல்களாலும், இதே சமயத்தில் அவன் பூம்பொழிலில் எழுதியிருந்த ஒரு காரசாரமான தலையங்கத்தினாலும், அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் மகாநாட்டைச் சென்னையில் நடத்தி உழைக்கும் பத்திரிகையாளர் தலைவர்களாகிய கோஷ் முதலியவர்களை வரவழைத்துப் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் பெரும் பத்திரிகை முதலாளிகளுக்கு எதிராகச் சில தீர்மானங்களை நிறை வேற்றியதாலும்-நாகசாமி அவனைத் தம் எதிரியாகக் கருதத் தொடங்குகிற சூழ்நிலை படிப்படியாக மிகச் சில வாரங்களிலேயே உருவாகிவிட்டது. -

அந்தச் சமயத்தில் முன்பு தேசிய இயக்க காலத்தில் பல முறை சிறை சென்றவரும் பாரதி பாடல்களுக்குத் தடை இருந்த காலத்திலேயே அதைத் தெருத் தெருவாகப் பாடிச் சென்றவருமாகிய மகாதேவன் என்ற அசல் தியாகி ஒருவர் தம்முடைய சிறிய முதலீட்டை வைத்து 'நேஷனல் டைம்ஸ்’ -என்ற ஆங்கிலத் தேசீய வார இதழ் ஒன்று சென்னை யிலிருந்து தொடங்கியிருந்தார். பின்பு நாளடைவில் அது தினசரியாகியது. அந்தரங்க சுத்தியோடும் உண்மைத் தேசிய உணர்வுடனும் அவர் தொடங்கியிருந்த அந்தப் பத்திரிகைக்கு நியூஸ் பிரிண்ட் காகிதம் போதுமான அளவு கிடைக்கவில்லை. காகிதக் கடைகளில் கிடைக்கும் விலை யுயர்ந்த வெள்ளைக் காகிதத்தை வாங்கிப் பத்திரிகை அடிக்க அவரிடம் வசதியில்லை. இந்த நிலைமையை ஒரு நாள் சுகுனளிடம் சொல்லி வருந்தினார் தியாகி மகா தேவன், சுகுணனுக்கு இது வியப்பை அளித்தது. சினிமா நட்சத்திரங்களின் படங்களை அச்சிட்டுப் படிக்க ஒன்று மில்லாமல் பார்க்க மட்டுமே பத்திரிகை நடத்துபவர் களுக்குக்கூட டன் டன்னாக நியூஸ் பிரிண்ட் வழங்கும். அரசாங்கம் தேசிய இலட்சியத்தை முன்வைத்துப் பத்திரிகை. நடத்தும் ஒரு நல்லவருக்குச் சாதாரண வசதியைக்கூடத். தராததைக் கண்டு வருந்திய அவன் விற்கிற பிரதிகளுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/161&oldid=590536" இலிருந்து மீள்விக்கப்பட்டது