பக்கம்:நெற்றிக்கண்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 0 நெற்றிக் கண்

மேல் பல மடங்கு அதிகமாகப் பொய்க் கணக்குக்காட்டி நியூஸ் பிரிண்ட் காகிதத்தை மலிவில் ஏராளமாக வாங்கிப் பெரும்பகுதியான மீதத்தை மிக அதிகமான கள்ளவிலைக்கு விற்கிற பலரை வாழவிட்டு இம்மாதிரி நல்லவர்களுக்கு அரசாங்கம் உதவாததைக் கண்டித்துப் பொதுவாக ஒரு தலையங்கம் பூம்பொழிலில் எழுதியதோடு அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் யூனியன் வெளியீடான "தி வாய்ஸ் ஆஃப் ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்"டிலும், இது பற்றி ஒரு கண்டனக் கடிதம் வெளியிட ஏற்பாடு செய்திருந்தான். இதன் பலனாகக் குறைபாடு உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுத் தியாகி மகாதேவனுக்கு நியூஸ் பிரிண்ட் கிடைக்க வழி பிறந்தது. தாமே இரகசியமாகச் செய்து கொண்டிருக்கிற ஒரு காரியத்தைக் கண்டித்துத் தம் பத்திரிகையிலேயே தலையங்கம் வந்ததை நாகசாமி அவ்வளவாக இரசிக்கவில்லை. மேலும் நாகசாமியை ஒத்த பெரும் பத்திரிகை முதலாளிகளான பண முதலைகள் சிலரும் இந்தத் தலையங்கத்தைக் கண்டித்துக் கூறி நாக சாமியை நெருக்கினார்கள். நாகசாமி ஆத்திரமடைந்தார். உடனே மாருதி பப்ளிகேஷன்ஸ் குரூப் வெளியீடான எந்தப் பத்திரிகையின் ஆசிரியரும் நிர்வாகத்தைக் கலந்து கொள்ளாமல் எதையும் எழுதலாகாதென்ற சுற்றறிக்கை நாகசாமியின் கையெழுத்திட்டு எல்லாருக்கும் வந்தது. கெடுபிடிகள் அதிகமாயின. -

வீக் எண்ட் எடிடோரியல் கான்ஃபரன்ஸ் என்ற பேரில் வார இறுதியில் சனிக்கிழமை தவறாமல் ஆசிரியர் குழுவின் கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதில் யாரையும் பேசவிடாமல் வாயடைத்து நாகசாமி கெடுபிடிகள் செய்தார். பத்திரிகை களில் தலையங்கங்கள் எல்லாம் அவர் குரலாகவே வெளி வந்தன எதைக்கேட்டாலும், நாங்கள் சம்பளம் கொடுக் கிறோம். நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்று பதில் கூறப் பட்டது. சுகுணன் தானாக மனம் வெறுத்து அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் போலக் காரியங்கள் எல்லாம் தடந்தன. இல் ட்ரீட்மெண்ட் என்னும் அவமரியாதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/162&oldid=590538" இலிருந்து மீள்விக்கப்பட்டது