பக்கம்:நெற்றிக்கண்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 6 1

படுத்தல் மெல்ல மெல்ல வேண்டுமென்றேயும், தற்செயல லாய் நடப்பது போலவும் செய்யப்பட்டது. ஒருநாள் சாரியாலய உபயோகத்துக்காக இரண்டு ரைட்டிங் பேடும்: -ஒரு கலர்ப் பென்சிலும் வேண்டுமென்று வழக்கம்போல ஒரு துண்டுத் தாளில் குறித்துக் கொடுத்து விளம்பர நிர்வாகி ஸ்டோர்ஸ் இன்சார்ஜ் ஆகிய ரங்கபாஷ்யத்துக்கு அனுப்பினான் சுகுணன். ரங்கபாஷ்யம் அந்தத் துண்டுத் தாளை வாங்கி வைத்துக் கொண்டு அதை எடுத்துச் சென்ற

சுகுணனின் ஊழியனிடம், என்னப்பா இது? தினம் தினம். கலர்ப் பென்சிலும், நோட்புக்கும் கேட்கிற்ாங்க! இதென்ன ஆபீஸ்ா, தர்மசத்திரமா?...கலர்ப் பென்விலையும் நோட் புக்கையும் வெளியிலே எங்கேயாவது கொண்டுபோய். வியாபாரம் பண்றாங்களா என்ன? பெரிய நியூஸன்ஸா, இல்ல போச்சு. சரி சரி அப்புறம் இருந்தாப் பார்த்து அனுப் பறேன்னு போய்ச் சொல்லு...' என்று நாகரிகமில்லாமல் பேசினாராம். அன்றைக்குச் சாயங்காலமே ஏதோ காரிய மாக அப்போது தயாராகிக் கொண்டிருந்த அடுத்தல் வாரத்துப் பூம்பொழிலின் மேக்அப் செய்த பாரம்:ஒன்றை வாங்கிவருமாறு தன் ஆள் ஒருவனைச் சுகுணனிடம்: அவன் அறைக்கு அனுப்பியிருந்தார் ரங்கபாஷ்யம்.

"ஃபாரம் கேட்கிறதுக்கு-இவர் யாருடா கண்ட கண்ட மடையன்லாம் எடிடோரியலில் தலையிடற மட்ட மான ஆபீஸாப் போச்சு இது ஃபாரத்தை அவங்களே பார்த்துக்குவாங்களாம்னு போய்ச் சொல்லு."-என்று மிக மிகக் கடுமையாக அந்த ஆளிடம் பதில் சொல்வி அனுப்பிவிட்டான் சுகுணன், வழக்கமாக இப்படிச் சந்தர்ப். பங்களில் தேடிவந்து, 'லெட்அஸ்ஃபர்கெட் -(நாம் இதை மறந்துவிடுவோம்) சொல்லும் ரங்கபாஷ்யம் அன்று வரவே இல்லை. கலர்பென்ஸிலும், ரைட்டிங்பேடும் மட்டும் மறுநாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்தபோது -- அவன் மேஜைமேல் தயாராகக் கொண்டுவந்து வைக்கப். பட்டிருந்தன. பத்திரிகையில் அன்று அச்சாக வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/163&oldid=590539" இலிருந்து மீள்விக்கப்பட்டது