பக்கம்:நெற்றிக்கண்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.2 நெற்றிக் கண்

பகுதிக்குரிய விஷயங்களில் சினிமா விமசர்னமும் இருந்தது. சினிமா விமர்சனத்தை வழக்கமாக எழுதுகிறவர் இரண்டு வார வீவில் போயிருந்ததனால் சுகுணனே அந்த வார விமர்சனத்துக்குரிய படத்தைப் பார்ப்பதற்காகப் பகல் காட்சிக்குப் போய் வந்தான். பகல்காட்சி முடிந்து தியேட்டருக்கு அருகிலிருந்தே சிற்றுண்டி விடுதியில் காப்பி யையும் முடித்துக்கொண்டு அவன் காரியாலயத்துக்குத் திரும்பவும் வந்தபோது மாலை 6 மணி ஆகியிருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வெளிவந்த ஆங்கிலப்படம் ஒன்றி லிருந்த உத்திகளையும், அதே சமயத்தில் சென்னையில் மாம்பவத்தில் ஒரு தியேட்டரில் பகல் காட்சியாக வந்த வங்காளிப் படம் ஒன்றின் கதையையும் திருடி அவற்றைத் தமிழில் எந்த அளவுக்குக் கெடுக்க முடியுமோ அந்த அளவுக்குக் கெடுத்து இந்தப் படத்தை எடுத்துத் தமது சொந்தக் கற்பனை என்றும் டமாரமடித்துக் கொண்டிருந் தார். இதன் தயாரிப்பாளர். :

"தமிழில் இவ்வளவுதான் கெடுக்க முடியும் போலும்’என்ற தலைப்புப் போட்டு அதற்கு ஒரு விமரிசனம் எழுதி ஃபோர்மெனிடம் கொடுத்துக் கம்போஸ் செய்ய சொல்லி விட்டு மாலையில் அறைக்குப் புறப்பட்டு விட்டான் அவன். விமர்சனம் அவனுடைய கடுமையான தாக்குதல்களேர்டு அடுத்த வாரத்துப் பூம்பொழிலிலும் வெளிவந்து விட்டது. - - -

பத்திரிகை வெளியான தினத்தன்று காலை பதினொரு மணிக்கு அவன் அலுவலகத்துக்குள் துழைந்ததும் 'சார் திங்க வந்ததும் உடனே வீட்டுக்கு ஃபோன் பண்ணச் சொல்லி ஐயா சொல்லியிருக்கிறார்...' என்றாள் டெலி போன் ஆப்ரேடர். அறைக்குள் போய் நாகசாமிக்கு டெலி போன் செய்தான் சுகுணன். நாகசாமி பேசினார். குரல் மிகவும் கடுமையாயிருந்தது. .

இந்த வாரம் சினிமா ரெவ்யூ எழுதியிருக்கிறது பாரு!...” . . . "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/164&oldid=590540" இலிருந்து மீள்விக்கப்பட்டது