பக்கம்:நெற்றிக்கண்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 . . நெற்றிக் கண்

ஊழியர்கள் உள்ளே ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தபோது, -

"இந்த லயனை எடுத்துடச் சொல்லி ஆர்டருங்க. இந்த ரூமுக்கு டெலிபோன் தேவையில்லைன்னு சொல்விட். டாங்க, ரங்சுபாஷ்யம் சாருக்கு இன்னொரு டெலிபோன் இருக்கட்டும்னு இதை அவர் டேபிளுக்கு ஷிப்ட் பண்ணச். சொல்லிட்டாங்க" என்று பதில் கிடைத்தது. கேட்க என்னவோ போலிருந்தாலும் சுகுணன் இதைப் பொருட். படுத்தவில்லை. இதனால் எல்லாம் ஒரு பத்திரிகை; யாளனின் உள்ளே ஜ்வலித்துக் கொண்டிருக்கிற நெஞ்சக் கனல் அணைந்து விடுமென்று நாகசாமி நினைப்பது தான். பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது அவனுக்கு. செளகரியங்களை இழக்க வைத்து அவமானப்படுத்துவதன் மூலம் அதைச் செய்கிறவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களே ஒழிய அந்தச் செளகரியங்கள். இழக்கும் தீரனை அவர்களால் தாழ்த்திவிட முடியாதென்று நம்பினான் அவன். அவனுடைய அறையில் டெலிபோனை அகற்றிக் கொண்டிருந்த அதே வேளையில் பக்கத்து அறை. யில் 'சர்மா டிரான் விஸ்டரை வைத்து உற்சாகமாகப். பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். உள்ளேயிருந்தவர்கள் டெலிபோனை நீக்கி எடுத்துக் கொண்டு வருகிறவரை அவன் வெளியே நிற்க வேண்டியதாயிற்று.

அவர்கள் போனதும் அவன் அறைக்குள் போய் அமர்ந்: தான். கம்போஸுக்குக் கொடுக்க வேண்டியவற்றை. எடுத்துச் சரிபார்த்துத் திருத்தியபின் - அதை எடுத்துக் கொண்டு போவதற்காகத் ஃபோர்மனை அழைக்கலா மென்ற நினைவில் ஏதோ ஞாபகமறதியாக ஃபோன் இருந்த இடத்தை நாடிய கை ஏமாற்றத்தோடு மீண்டது. பையனைக் கூப்பிட்டுக் கொடுக்கலாமென்று - நீண்ட நாள் உபயோகிக்காமல் உள்ளே டிராயரில் கிடந்தன. மேஜை மணியை எடுத்து மேஜைமேல் டெலிபோனிருந்தது. இடத்தில் வைத்துத் தட்டினான். மணி ஒசைக்குப் பதில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/166&oldid=590542" இலிருந்து மீள்விக்கப்பட்டது