பக்கம்:நெற்றிக்கண்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 6 நெற்றிக் கண் லிருந்தே தன்னை வெதுப்பத் திறந்திருப்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அதில் வெதும்பி விழுந்துவிட அவன் ஒருகாலும் தயாராயில்லை. "நெற்றிக் கண்ணை நெருப் பாகத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று உரத்துக் கூறி விட்டு அங்கிருந்து எழுந்து நடக்கத்தான் தயாராயிருந்தான் அவன.

என்னை ரொம்ப மன்னிச்சிடுங்க சார்! என் மேலே ஒண்ணும் தப்பில்லை. நான் குழந்தை குட்டிக்காரன்' என்று குழைந்தார் நாயுடு. ரங்கபாஷ்யத்தையும், சர்மா வையும் போல் எல்லாக் கெடுதல்களையும் மறைவாக உடனிருந்தே செய்துகொண்டு நேரிலும் சிரித்துச் சிரித்துப் பேசுகிறவர்களைவிடக் காதில் கேட்டதை அப்படியே சொல்லி மன்னிப்புக் கேட்கும் ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு நாகரிகமான மனிதராகத் தோன்றினார் சுகுண னுக்கு. அச்சகத்திலிருந்து நேரே அலுவலகத்திலிருந்து தன் அறைக்குத் திரும்பிய சுகுணன் அங்கு ஒடிக் கொண் டிருந்த மின் விசிறியையும் பகலிலேயே எரிகிற விளக்கையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்த நடையோடு வெளியே புறப்

பட்டான்.

ஒன்பதாவது அத்தியாயம்

'நம் மனத்தை நாம் எப்போது அதிகமாகப் பிறருக்கு ஒளித்துவிட முயல்கிறோமோ அப்போது தான் அது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து விடுகிறது' * -

சுகுணன் அந்தக் காரியாலயத்திலிருந்து ஒரு திடமான முடிவுக்கு வந்தவனாக எழுந்திருந்து வெளியேறும்போது கை இடறி மேஜை மேலிருந்த டேபிள் மணி கீழே விழுந்து உடைந்தது. அதை மறுபடி எடுத்து வைக்கக் குனிந்தவன்-அது நன்றாகவே உடைந்து அந்த உடைதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/168&oldid=590544" இலிருந்து மீள்விக்கப்பட்டது